New Model Syllabus [file image]
புதிய மாதிரி பாடத்திட்ட அறிவிப்பு குறித்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பு இல்லாத வகையிலேயே மாதிரி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படுவதன் முக்கிய நோக்கம் மாணவர்களின் நலனை மேம்படுத்துவதே ஆகும்.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாட பிரிவுகளுக்கு இடையே 75% இணைத்தன்மை இல்லை. பாடப் பிரிவுகளுக்கு இடையே இணைத்தன்மை இல்லாததால் மாணவர்கள் பணியில் சேர சிரமப்படுகின்றனர். உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையே மாறுதல் கோரும் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலேயே மாதிரி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
2018-19க்கு பின் சில உயர்கல்வி நிறுவனங்களில் பாட திட்டம் மறுசீரமைக்கப்படாததை ஈடு செய்யவே மாதிரி பாடத்திட்டம். பாடத்திட்டத்தின் உயரிய நோக்கம் கல்வியாளரிடைய சரியாக சென்றடையும் பொருட்டே விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் ஓராண்டாக மேற்கொண்ட முயற்சியால் புதிய மாதிரி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், 10 கலை அறிவியல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகளின் பேராசிரியர்கள் பாடத்திட்ட சீரமைப்பில் உள்ளது. 922 பேராசிரியர்களை கொண்டு 870 கூட்டங்கள் நடத்தப்பட்டு, 301 மாதிரி பாடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மாதிரி பாடத்திட்டங்கள் மறுசீரமைப்பு தொடர்பாக தொழில்துறையினரின் ஆலோசனையும் பெறப்பட்டது.
நான் முதல்வன் மற்றும் திறன் மேம்பாட்டு நோக்கங்களுக்கு ஏற்ப புதிய மாதிரி பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023-24 கல்வியாண்டு முதல் புதிய மாதிரி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. பல்கலை., தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பில்லாத வகையில் புதிய மாதிரி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…