தேர்தல் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை. கொரோனா அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, ஒரு புறம் அனைத்து கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் எந்தவித அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க தேர்தல் அதிகாரிகள் தேர்தல் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் அதிகாரிகள் நாள்தோறும் பணம், பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கொரோனா பாதித்த வேட்பாளர்கள் கவச உடையுடன் வாக்களிக்கலாம். கடைசி ஒரு மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் தமிழக சட்டமன்ற தேர்தல் திட்டமிட்டப்படி நடக்கும்.
தேர்தல் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை. கொரோனா அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்தார். தமிழகத்தில் ஆண் வாக்காளர்கள்-3 கோடி 9 லட்சத்து 95 ஆயிரத்து 440 பேர், பெண் வாக்காளர்கள்-3 கோடி 19 லட்சத்து 40 ஆயிரத்து 880 பேர் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 10 லட்சம் பேர் அதிகம் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், 6 கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்து 512 வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை 7,255 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 4,512 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 2,743 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். நேற்று வரை ரூ.231.63 கோடி பணம், பரிசுப் பொருட்களும், ரூ. 1.70 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என கூறினார்.
சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…
பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…
டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…
நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…
லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…