சிதம்பரத்தின் கருத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
சத்திய மூர்த்தி பவனில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிரான கண்டனக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், அதிமுக அரசு எந்த மசோதாவையும் முழுமையாக படித்து பார்க்காமல் ஆதரவு அளிக்கிறது . தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்றினால் கூட அதிமுக அரசு மவுனமாக இருக்கும் என்றும் பேசினார்.
சிதம்பரத்தின் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் பழனிசாமி பதில் அளித்துள்ளார்.மேட்டூர் அணையை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில்,அவர் எத்தனை ஆண்டுகாலம் மத்திய அமைச்சர் பதவியில் இருந்தார்.அவரால் இந்த நாட்டுக்கு என்ன பயன்?பூமிக்குத்தான் பாரம்.அவர் என்ன திட்டம் கொண்டு வந்து செயல்படுத்தினார்.
தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளான முல்லைப்பெரியாறு உள்ளிட்ட பிரச்சினைகளை அமைச்சராக இருந்த போது சரி செய்தாரா என்று கேள்வி எழுப்பினார்.மேலும் அவருக்கு சுயநலம் தான் முக்கியம் ,நாடு நலம் முக்கியம் அல்ல என்று தெரிவித்தார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…