[file image]
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் சுமார் 40 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவ கட்டமைப்புகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சுகாதாரத்துறை உத்தரவில் குறிப்பாக, குடிநீர் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்.
கொசுக்கள் உற்பத்தியை ஒழிப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவக் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். பருவ கால தொற்றுகளை உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடையில்லா மின்வசதி இருப்பதை உறுதி செய்தல், காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் மருத்துவ முகாம்கள் மற்றும் தேவைப்படும் இடங்களில் நடமாடும் மருத்துவ குழுக்கள் அனுப்பலாம் என்றும் புயல் மற்றும் கனமழைக்கு முன்பே விரைவு சிகிச்சைக் குழுக்களை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்க வேண்டும் என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
காபூல் : ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நடைபெற்ற ஷ்பகீஸா கிரிக்கெட் லீக் (Shpageeza Cricket League) டி20 போட்டியில் ஒரு…
சென்னை : 2025 ஜூலை 22 அன்று, சாத்தான்குளம் கொலை வழக்கில் ஒரு முக்கியமான திருப்பமாக, முதல் குற்றவாளியான முன்னாள்…
சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் சூர்யா நாளை தன்னுடைய 50-வது பிறந்த…
சென்னை : கடந்த ஜூலை 12ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-4 தேர்வுகளை மாநிலம் முழுவதும்…
டெல்லி : இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…