இனி வாட்ஸ் அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்டை பெறலாம்.. 20% தள்ளுபடி – மெட்ரோ நிர்வாகம்

சென்னையில் வாட்ஸ் அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் திட்டம் தொடக்கம்.
சென்னையில் வாட்ஸ்ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாட்ஸ்ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் சித்திக், வாட்ஸ் அப் டிக்கெட் பெறும் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
அதன்படி, 83000 86000 என்ற எண்ணுக்கு புறப்படும் இடம் & சேரும் இடத்தை அனுப்பி டிக்கெட்டை பெறலாம். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் HI என குறுஞ்செய்தி அனுப்பினால் மெட்ரோ சார்பில் டிக்கெட் புக் செய்ய வழிகாட்டுதல் வழங்கப்படும். பயண விவரங்களை குறிப்பிட்டு யுபிஐ மூலம் பணம் செலுத்தும்பட்சத்தில் கியூ ஆர் கோர்டு பயணசீட்டு கிடைக்க பெறும்.
இந்த புதிய வசதி மூலம் ஒரு மொபைலிருந்து 6 டிக்கெட்டுகளை ஒரே நேரத்தில் பதிவு செய்யலாம் கியூ ஆர் கோர்டு, மெட்ரோ பயண அட்டை, சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டு வரிசையில் வாட்ஸ் அப் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸ் அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பதிவு செய்தால் 20% தள்ளுபடி எனவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட்டுக்காக பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க வாட்ஸ் அப் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மும்பை, பெங்களூருவை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயிலும் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Experience the convience of ticket booking at your fingertips!
WhatsApp ticketing is here!#metrorail #chennaimetro pic.twitter.com/8qtbSNM0sR— Chennai Metro Rail (@cmrlofficial) May 17, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025