எடப்பாடி பழனிசாமி ஓர் பச்சைத்துரோகி எனவும் சசிகலா தான் முதல்வர் பதவி கொடுத்தார் எனவும் பல்வேறு விமர்சனங்களை ஓ.பன்னீர்செல்வம் நேற்றைய மாநாட்டில் முன்வைத்தார்.
நேற்று திருச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருச்சியில் பிரமாண்ட மாநாடு ஒன்றை நடத்தினார். அதில் அவரது ஆதாராளர்கள் வைத்தியலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன் என பலர் கலந்துகொண்டனர். ஏராளமான தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் , எடப்பாடி பழனிசாமி குறித்து பல்வேறு குற்றசாட்டுகளையும் , கடும் விமர்சனங்களையும் முன்வைத்தார். அவர் பேசுகையில், உண்மையான தொண்டனான எனக்கு ஜெயலலிதா 2 முறை பதவி கொடுத்தார். 3வது முறையாக சசிகலா பதவி கொடுத்தார். பின்னர் அந்த பதவியை திரும்ப கேட்டனர் நான் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.
பழனிசாமிக்கு பதவி யார் கொடுத்தது.? சின்னமா (சசிகலா) உனக்கு பதவி கொடுத்தார். அதன் பிறகு அவர்களையே நாய் என்று விமர்சித்தார் பன்னீர்செல்வம் பழனிசாமி ஒரு பச்சை துரோகி. ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொதுசெயலாளர் என்ற விதியை நீக்கி, தன்னை தானே பொதுச்செயலாளர் என்று அறிவித்து கொண்டார் பழனிசாமி.
அதன் பிறகு , கருப்பு கண்ணாடி, தொப்பி என அணிந்து கொண்டு எம்ஜிஆர் போல போஸ் கொடுக்கிறார் பழனிசாமி. எம்ஜிஆரின் கால்தூசுக்கு நிகராக மாட்டார் பழனிச்சாமி என மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தார் பன்னீர்செல்வம். 2011 சட்டமன்ற தேர்தலை தழுவி, ஜெயலலிதா கூறியதன் பெயரில் கோவையை அடுத்து 2வது கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இங்கு தான் ஜெயலலிதா அடுத்த முதல்வர் அம்மா தான் என மக்கள் தீர்மானித்த நகரம் என பேசினார் ஓ.பன்னீர்செல்வம்.
அடிமட்ட தொண்டனுக்காக உருவாக்கபட்ட கட்சி அதிமுக. தொண்டர்களின் பணத்தை செலவு செய்ய உனக்கு (பழனிச்சாமி) யார் அதிகாரம் கொடுத்தது.? நயவஞ்சகர்களை ஓட ஓட விரட்டும் காலம் நெருங்கி விட்டது என பல்வேறு விமர்சனங்களை திருச்சி மாநாடு உரையில் பேசினார் ஓ.பன்னீர்செல்வம்.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…