ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஓபிஎஸ் – ஈபிஎஸ் வாழ்த்து.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்துகுறிப்பில், திருஓணம் திருநாளை வசந்த கால விழாவாக உவகையோடு கொண்டாடி மகிழும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எங்களது ஓணம் திருநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.
திருமால் வாமன அவதாரம் பூண்டு மகாபலி சக்கரவர்த்தியை அடக்கி, பின்னர் அம்மன்னன் வேண்டிய வண்ணாம் மக்கள் அனைவரும் எப்போதும் கபிட்சமாக இருக்கவும், அவர்களை ஆண்டுதோறும் காண வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் ஏற்று அருள் புரிந்தார். அதன்படி மகாபலி சக்கரவர்த்தி மக்களைக் காண வரும் நன்நாளே திருவோணம் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
திருவோணம் பண்டிகையின் போது, மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் பத்து நாட்களுக்கு அரிசி மாவினால் அழகிய கோலமிட்டும், அக்கோலத்தை வண்ணாப் பூக்களால் அலங்கரித்தும், குத்துவிளக்கு ஏற்றியும் மனம் மகிழ்ந்து கொண்டாடுவார்கள். இப்பண்டிகையின் போது, ஏழை, எளிய மக்களுக்கு உணவும், உடையும் வழங்கி ஈகைத் தன்மையின் சிறப்பினை உலகிற்கு எடுத்துரைப்பார்கள்.
அன்பு அமைதி, சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும்; அகந்தையும், ஆணவமும் அகற்றப்பட வேண்டும்’ என்கிற உயரிய கருத்தினை அனைவரும் அறியும் வகையில், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் இந்த திருஓணத் திருநாளில், அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், எங்களது இதயம் களிந்த ஓணம் திருநாள் நல்வாழ்ந்துகளை மீண்டும். ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…