வீட்டிற்குள் தனியாக இருந்து ஒடிசா பெண்!மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தோழி கண்ட காட்சி!

- வீட்டிற்குள் தனியாக இருந்த இளம்பெண்.மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தோழி அவரை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
- தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் 21 வயது இளம் பெண் ஆவார்.இவர் கடந்த ஓராண்டாக காஞ்சிபுரத்தை அடுத்த ஆதனஞ்சேரி பெரியார் தெருவில் தோழியுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஒரகடம் ராயல் என்பீல்டு கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு நேற்று இரவு நேர வேலை என்பதால் தோழி மட்டும் காலை வேலைக்கு சென்றுள்ளார்.அந்த இளம்பெண் வீட்டில் தனியாக ஓய்வு எடுத்து கொண்டிருந்துள்ளார்.
பின்னர் மாலை 4 மணியளவில் தோழி வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது வீடு பூட்டாமல் இருந்துள்ளது.அந்த இளம்பெண் மயங்கிய நிலையில் சத்தம் இல்லாமல் கீழே விழுந்து கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தோழி உடனே ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.பின்னர் அந்த இளம்பெண் இறந்தது தெரியவந்துள்ளது.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தோழி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடலில் கன்னம், மார்பு உள்ளிட்ட இடங்களில் நகக்கீறல்களும், கழுத்து பகுதி சிவந்த நிலையில், நகக்கீறல்களும் இருப்பதாக கூறியுள்ளனர்.
பின்னர் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் இளம்பெண் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.மேலும் அப்பகுதியில் சந்தேகப்படும் விதத்தில் இரண்டு,மூன்று நபர்கள் நடமாடியதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.
இதற்கிடையே தாம்பரத்தில் தங்கி அதே கம்பெனியில் பணிபுரியும் இளம்பெண்ணின் காதலன் என்று கூறப்படும் மணீஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.மேலும் அப்பகுதியில் கஞ்சா அருந்துபவர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து இறந்த பெண்ணின் காதலன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலரிடம், காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஜட்ஜ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்! உச்சநீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு வீடியோ! அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?
March 23, 2025
KKRvsRCB : கொல்கத்தாவில் வெற்றி கொடி நாட்டிய பெங்களூர்! கிங் கோலி படைத்த மிரட்டல் சாதனை!
March 22, 2025
என்னை விட்டுட்டோம்னு பீல் பண்ணுங்க! கொல்கத்தாவுக்கு அதிரடி மூலம் பதிலடி கொடுத்த சால்ட்!
March 22, 2025