MKStalin [Image source : Twitter/MKStalin]
விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பஹானாகா ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நின்றுகொண்டிருந்த ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 179 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும் என்று உறுதியளித்துள்ளார். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்த முதல்வர், ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக்கைத் தொடர்புகொண்டு விபத்து குறித்து கேட்டறிந்துள்ளார்.
மேலும், விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டுள்ளார்.
மேலும், உடனடியாக அவசர உதவி அழைப்பு எண்ணை உருவாக்கி உதவிடவும் உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, 044-28593990, 9445869843 ஆகிய தொலைபேசி எண்களுக்கும், 9445869848 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ரயில் நிலையத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…