11,12 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதையடுத்து, 11 ஆம் வகுப்புக்கு மார்ச் 26 ம் தேதி நடக்க இருந்த தேர்வு ஜூன் 16-ம் தேதி நடத்தப்படும் என்றும் மார்ச் 24 ம் தேதி தேர்வில் கலந்து கொள்ளாத +2 மாணவர்களுக்கு ஜூன் 18 ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஏற்கெனவே தேர்வு எழுதிய 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 27 ஆம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி 11, 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மண்டலவாரியாக அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 37 மாவட்டங்களை 5 மண்டலங்களாக பிரித்து அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…