ஆன்லைன் சூதாட்ட தளங்கள் தடை செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையுமே இணையதளம் தான் அடக்கி ஆளுகிறது. இன்று பொழுதுபோக்காக இணையதளம் தான் உள்ளது. தற்போது பெரும்பாலானோர் இணையதள விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளனர்.
இந்த விளையாட்டுக்களால் அவர்கள் பணத்தை இழப்பதோடு, அதில் நஷ்டம் ஏற்படும் போது தனது உயிரையும் மாய்த்து கொள்கின்றனர். இதனால், முற்றிலுமாக பாதிக்கப்படுவது அவர்களது குடும்பத்தினர் தான். இந்த உயிரிழப்புகளை தடுக்க, இந்த ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்யுமாறு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், இதுகுறித்து போது பேசுகையில், ‘ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய, சட்ட திருத்தம் கொண்டுவரப்படும் என்றும், ஆன்லைன் சூதாட்ட தளங்கள் தடை செய்யப்படும் என்றும், சூதாட்டத்தில் ஈடுபடுவோர் குற்றவாளிகளாக கருதப்படுவர்.’ என்றும் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…