பழனியில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி…!

பழனி முருகன் கோவிலில் இன்று முதல், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடிக்கவில்லையென்றால், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பழனி முருகன் கோவிலில் இன்று முதல், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு 1,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும்,இரவு 7 மணிக்கு மேல் சாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்றும், 10 வயதிற்கு உட்பட்டவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025