Madras High Court [Representative Image]
துணை ஆட்சியராக பொறுப்பு வகிக்கும் ஜெயராம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில், தனது பெயர் பதவி உயர்வு பெரும் பட்டியலில் இருந்தும் இன்னும் பதவி உயர்வு கிடைக்கப்பெறவில்லை என்று வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு முதலில் தனிநீதிபதி அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்த போது, பட்டியலில் இருந்தாலே பதவி உயர்வு கொடுக்க வேண்டும் என்ற விதிமுறை இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து மீண்டும் ஜெயராம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கை இரு நீதிபதி அமர்வு விசாரிக்கையில்,பதவி உயர்வு குறித்து துறை ரீதியிலான விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. அதன் பெயரில், பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஏனென்றால், அந்தந்த துறை ரீதியிலான நீதிமன்ற கேள்விகளுக்கு துறை தலைமை செயலாளர்கள் மட்டுமே பதில் கூற வேண்டும் என்றும், இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து துறை செயலாளர்களுக்கும் அனுப்ப வேண்டும் என தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பாக தலைமை செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…