#Breaking:அதிமுகவில் நாளை முதல் விருப்ப மனு;கட்டணம் இதுதான்?- ஓபிஎஸ்,இபிஎஸ் அறிவிப்பு!

Published by
Edison

சென்னை:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு,நாளை முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படுவதாக ஓபிஎஸ்,இபிஎஸ் அறிவித்துள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு,அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட அனுமதி கோரும் அதிமுகவினர் நாளை முதல் விருப்ப மனுக்களைப் பெறலாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

மேலும்,இது தொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர், நகர மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகள், வருகின்ற 26.11.2021 முதல் 28.11.2021 வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக அலுவலகங்களில் உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

இதில், சென்னை மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகள் மட்டும், தங்களுக்கான விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களை, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சென்னையைச் சேர்ந்த மாவட்டக் கழகங்களின் மூலம் தலைமைக் கழகத்தில் பெற்று, பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.அதன்படி,

  • மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் – விண்ணப்பக்கட்டணம் ரூ.5,000.
  • நகர மன்ற வார்டு உறுப்பினர் -விண்ணப்பக்கட்டணம் ரூ.2,500
  • பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் – விண்ணப்பக்கட்டணம் ரூ.1,500 ஆகும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி ஏற்கெனவே விருப்ப மனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகள், அதற்கான கட்டண அசல் ரசீதினை வைத்திருப்பவர்கள் மட்டுமே, அதனை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக அலுவலகங்களில் சமர்ப்பித்து, கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் விருப்ப மனு பெறுவது சம்பந்தமான விபரங்களை, கழக உடன்பிறப்புகள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும். அதே போல்,கொரோனா தடுப்புநடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விருப்ப மனுக்களைப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்”,என்று தெரிவித்துள்ளனர்.

Recent Posts

ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்! காரணம் என்ன?

ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்! காரணம் என்ன?

சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…

21 minutes ago

‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…

1 hour ago

நீலகிரி, கோவை மொத்தம் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…

2 hours ago

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? ஏ.பி. அபூபக்கர் சொன்ன முக்கிய தகவல்!

சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…

3 hours ago

சாத்தான்குளம் வழக்கில் புதிய திருப்பம்! ஸ்ரீதர் அப்ரூவராக மாற எதிர்ப்பு!

மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…

3 hours ago