கர்நாடக தேர்தலில் வாபஸ் பெறுவதற்கு இதுதான் காரணம்.! ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விளக்கம்.!

Published by
மணிகண்டன்

இரட்டை இலை சின்னம் கிடைக்காத காரணத்தால் கர்நாடக தேர்தலில் இருந்து விளக்குகிறோம் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி. 

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 10ஆம் தேதி 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற  உள்ளது. கர்நாடகாவில் அதிமுக ஏற்கனவே பல முறை போட்டியிட்ட காரணத்தால் இந்த முறையும் போட்டியிட வேலைகளை ஆரம்பித்து.

அதில் ஏற்கனவே தமிழகத்தில் நடந்தது, போல  இபிஎஸ் – ஓபிஎஸ் என இரு பிரிவுகளாக தேர்தல் களத்தில் களமிறங்கின. இதில் புலிகேசி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் அன்பரசன் வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் நெடுஞ்செழியன் மனு நிராகரிக்கப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பு  காந்திநகர் தொகுதியில் குமார் என்பவரையும், கோலார் தங்கவயல் பகுதியில் ஆனந்த்ராஜ் என்பவரையும் களமிறக்கியது. அந்த தொகுதிகளில் இபிஎஸ் எந்த வேட்பாளரையும் களமிறக்கவில்லை. இதில் கோலார்  தங்கவயல் பகுதியில் ஆனந்த்ராஜ் வேட்புமனு சுயேச்சை வேட்புமனுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், வேட்பாளர் குமார் அதிமுக வேட்பாளர் என குறிப்பிட்டதால் அவரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு இருந்தது.

இந்நிலையில், நேற்று பெங்களூருவில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து தங்கள் தரப்பு வேட்பாளர்கள் மற்றும் கர்நாடக சட்டமன்ற தேர்தல் குறித்தும் பேசினார். அவர் கூறுகையில், கர்நாடகாவில் 2018ஆம் ஆண்டே இரட்டை இலை சின்னம் அதிமுக வசமிருந்து சென்று விட்டது. அதனால், அப்போதைய தேர்தலில் சுமார் 500 வாக்குகள் மட்டுமே பெற்றோம். தற்போதும் அதே போல இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்பதால், மீண்டும் அதே போல ஒரு தோல்வி வேண்டாம் எனவும் , அதிமுகவின் பெயர் பாதிக்கப்படும் என கூறி  தங்கள் தரப்பு வேட்பாளர்களான குமார் மற்றும் ஆனந்த்ராஜ் ஆகியோர் வாபஸ் பெற உள்ளனர் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி குறிப்பிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சிவகிரி இரட்டைக் கொலை வழக்கு : “இனிமே சிபிசிஐடி விசாரிக்கும்”..டிஜிபி அறிவிப்பு!

சிவகிரி இரட்டைக் கொலை வழக்கு : “இனிமே சிபிசிஐடி விசாரிக்கும்”..டிஜிபி அறிவிப்பு!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையன் தோட்டத்தில் வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (வயது 72)…

9 minutes ago

கேரள செவிலியருக்கு தூக்குத் தண்டனை.! ஏமனில் நடந்தது என்ன?

ஏமன் : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, ஏமனில் 2017-ம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மெஹதியைக்…

37 minutes ago

பாலம் இடிந்த விபத்தில் உயிரிழப்பு 9ஆக உயர்வு.., பிரதமர் மோடி நிவரணம் அறிவிப்பு.!

குஜராத் : குஜராத்தில் பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 9ஆக உயர்ந்துள்ளது. 6 பேர் காயங்களுடன்…

1 hour ago

கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர், ஓட்டுநர் உட்பட 13 பேருக்கு சம்மன்.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்று காலை 7:40 மணியளவில், கிருஷ்ணசாமி சிபிஎஸ்சி பள்ளி வேன் ரயில்வே கேட்டைக்…

2 hours ago

“மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது” – மு.க.ஸ்டாலின் அறிவுரை!

திருச்சி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா (75-வது ஆண்டு) நிகழ்ச்சியில் இன்று காலை…

2 hours ago

கடலூர் ரயில் விபத்து: செம்மங்குப்பத்தில் புதிய கேட் கீப்பர் நியமனம்.!

கடலூர் : செம்மங்குப்பத்தில் உள்ள ரயில்வே கேட்டில் நேற்றைய தினம் ஒரு துயரமான விபத்து நிகழ்ந்தது. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை…

3 hours ago