“மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது” – மு.க.ஸ்டாலின் அறிவுரை!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சி ஜமால் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

MK Stalin - College

திருச்சி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா (75-வது ஆண்டு) நிகழ்ச்சியில் இன்று காலை 11:15 மணியளவில் கலந்து கொண்டார். அப்பொழுது கல்லூரியின் ‘Global Jamalians Block’ கட்டடத்தைத் திறந்து வைத்தார். இதன் பின்னர், இந்த விழாவில் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என நமக்கான பல வழிகள் உள்ளன. ஆனால், மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது” என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஆய்வு கூட்டம், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும், உங்களை போன்ற இளம் மாணவர்களை சந்திக்கும் போதுதான் எனக்கு எனர்ஜி அதிகமாகுகிறது. அதிலும் மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு உடனே வருகிறேன் என சொல்லிவிடுவேன்.

ஓரணியில் தமிழ்நாடு – என்ற முழக்கத்தோடு நின்றால் தமிழ்நாட்டை யாராலும் வீழ்த்த முடியாது. நான் அரசியல் பேசவில்லை, மாணவர்கள் நிச்சயம் அரசியல் புரிதல் இருக்க வேண்டும் என பேசுகின்றேன். கல்லூரிகள் எத்தனையோ பல தலைவர்களை நாட்டுக்கு கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட தலைவராக மாணவர்கள் நீங்களும் உருவாக வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்