எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு மாதம் ரூ.7500 வழங்க உத்தரவு

Published by
Venu

எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணின் சத்து உணவிற்காக மாதம் ரூ.7500 வழங்க  உயர்நீதிமன்ற  மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த 2018-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து கர்ப்பிணி பெண்ணுக்கு தவறுதலாக எச்.ஐ.வி பாதித்த ரத்தத்தை ஊழியர்கள் செலுத்தினார்கள்.இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்கள்தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்கவும் ,அதனை டெபாசிட் செய்யவும் ,அவருக்கு 450 சதுர அடிக்கு குறையாமல் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு கட்டி கொடுக்கவும் , நிரந்தர வேலை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது.அப்பொழுது, எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணின் சத்து உணவிற்காக மாதம் ரூ.7500 வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அந்த பெண்ணிற்கு இளநிலை உதவியாளர் பதவியும் வழங்குவது குறித்தும் ,தாம்பரத்தில் உள்ள சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் அந்த பெண்ணிற்கான மருத்துவ வசதிகள் அளிக்க ஏதேனும் அளிக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து பதில் அளிக்கவும்,  வழக்கினை ஒத்திவைத்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published by
Venu

Recent Posts

கடைசி போட்டியில் அதிரடி காட்டிய சென்னை! குஜராத்துக்கு வைத்த பெரிய டார்கெட்!

கடைசி போட்டியில் அதிரடி காட்டிய சென்னை! குஜராத்துக்கு வைத்த பெரிய டார்கெட்!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…

13 hours ago

திருநெல்வேலி..தென்காசி மாவட்டங்களில் நாளை கனமழை…அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…

14 hours ago

பாஜகவிடம் அடைக்கலம் புகுந்த தி.மு.க தலைமை…தவெக விஜய் கடும் தாக்கு!

சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற  நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில…

14 hours ago

6 சிக்னல் கொடுத்த கருண் நாயர்..நோ சொன்ன அம்பையர்! டென்ஷனான பிரித்தி ஜிந்தா!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…

15 hours ago

இந்துக்கள் என்னை தங்கள் உடன்பிறப்பாகவே கருதுகிறார்கள் -மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…

17 hours ago

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…

18 hours ago