பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு!

ஆந்திரப் பிரதேசத்தின் சந்திரபாபு நாயுடு, பீகாரின் நிதிஷ் குமார் உள்ளிட்ட முக்கிய முதல்வர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

narendra modi bjp

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் பங்கேற்கும் முக்கிய மாநாடு நடைபெறுகிறது. இந்தக் கூட்டம், ஜம்மு-காஷ்மீரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது.

ஆந்திரப் பிரதேசத்தின் சந்திரபாபு நாயுடு, பீகாரின் நிதிஷ் குமார் உள்ளிட்ட முக்கிய முதல்வர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு, ஆளுமை மேம்பாடு, மற்றும் மக்களவைத் தேர்தல் 2024-இன் தாக்கங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், NDA ஆளும் மாநிலங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், மத்திய அரசின் திட்டங்களை திறம்பட செயல்படுத்தவும் இந்தக் கூட்டம் முக்கியமானதாக அமையும்.

அதே சமயம், இந்த மாநாடு, பாஜக ஆளும் மாநில முதல்வர்களை மட்டுமே உள்ளடக்கியதாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ஆபரேஷன் சிந்தூரை அரசியலாக்குவதாகவும், எதிர்க்கட்சிகளை அழைக்காமல் பாஜக முதல்வர்களை மட்டும் சந்திப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கு எதிராக, 15 மாநிலங்களில் காங்கிரஸ் “ஜெய்ஹிந்த் சபா” பேரணிகளை நடத்த உள்ளது, இதில் முன்னாள் ராணுவத்தினரும் பங்கேற்கின்றனர். ஏற்கனவே, இதைப்போலவே, கடந்த 2023-இல் நடந்த NDA கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்றன, இதில் தமிழகத்தின் அதிமுக, பாமக போன்ற கட்சிகளும் அடங்கும். எனவே, இந்தமுறை நடக்கும் கூட்டத்தில் எந்தெந்த கட்சிகள் பங்கேற்கவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்