ஸ்டெர்லைட் ஆலையில் இயந்திர கோளாறு காரணமாக 3 நாட்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்…!

Published by
லீனா

இயந்திர கோளாறு காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்படும் என்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக உச்ச நீதிமன்றமும், தமிழக அரசும் அனுமதி அளித்துள்ளது. மேலும், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணிகளை கண்காணிக்க, இதற்கென்று தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிய நிலையில்,  அங்கு உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை, நேற்று காலை 7 மணி அளவில் அதனை விநியோகிக்கும் பணிகள் தொடங்கியது.

இதனை ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி, போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து புறப்பட்டு சென்றது. ஸ்டெர்லைட் ஆலையில் முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 5 டன் ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் திடீரென்று ஆக்சிஜன் தயாரிப்பு கூடத்தில் உள்ள குளிர்விப்பான் இயந்திரத்தில்  பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் நள்ளிரவு முதல் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது இயந்திரத்தை பழுது நீக்கும் பணியில் அங்குள்ள பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.  பழுது நீக்கப்பட்டு உற்பத்தியை தொடங்க இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை ஆகும் என்றும், அடுத்த 3 நாட்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்படும் என்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

19 minutes ago

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…

42 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

1 hour ago

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

16 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

17 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

17 hours ago