கடந்த ஆண்டு இதே நாளில்தான் திமுக வெற்றி பெற்றது என்று மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் விழாவில் முதல்வர் உரை. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. அப்போது, மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 3,000 பேர் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதன்பின்னர் இவ்விழாவில் திமுகவில் இனைந்தவர்களை வரவேற்று முதலமைச்சர் உரையாற்றினார். அவரது உரையில், ஆட்சியில் இருந்தாலும், […]
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பிற்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும்,11 ஆம் வகுப்பிற்கு மே 9 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலும்,12 ஆம் வகுப்பிற்கு மே 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.இதனிடையே,கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்தவில்லை […]
மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.அப்போது வழக்கமான ஹிப்போகிரேடிக் உறுதிமொழிக்கு பதிலாக மாணவர்கள் சமஸ்கிருதத்தில் மகரிஷி சரம் சப்த் உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து,சமஸ்கிருத உறுதிமொழி ஏற்றது தொடர்பாக விளக்கமளிக்கு கல்லூரி முதல்வர் ரத்னவேல் அவர்கள் விளக்கமளிக்க மருத்துவ கல்லூரி இயக்குநரகம் உத்தரவிட்டது.அதன்பின்னர்,தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதள பக்கத்தில் ஆங்கிலத்தில், சமஸ்கிருத வாக்கியங்கள் இருந்த உறுதிமொழியை மாணவர் சங்க பொதுச்செயலாளர் ஒருவர் தவறுதலாக பதிவிறக்கம் செய்து விட்டதாகவும்,மருத்துவ கல்வி இயக்குனரகம் […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,ஏப்ரல் 6 ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்களால் கடைசியாக பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்பட்டு ரூ.10 வரை அதிகரித்தது. இந்நிலையில்,சென்னையில் இன்று 26-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை.அதன்படி,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு,தொடர்ந்து 26 நாட்களாக பெட்ரோல்,டீசல் விலை ரூ.100-ஐ விட்டு குறைக்கப்படாமல் இருப்பது […]
மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன்,பி.மூர்த்தி,மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர்,கல்லூரி முதல்வர் ரத்னவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது வழக்கமான உறுதிமொழிக்கு பதிலாக மாணவர்கள் சமஸ்கிருதத்தில் மகரிஷி சரம் சப்த் உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையானது.இதனைத் தொடர்ந்து,மேடையில் பேசிய அமைச்சர் பிடிஆர்,சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கபட்டது அதிர்ச்சியளிக்கிறது என அதிருப்தி தெரிவித்தார். இதனையடுத்து,சமஸ்கிருத உறுதிமொழி ஏற்றது தொடர்பாக விளக்கமளிக்கு கல்லூரி முதல்வர் ரத்னவேல் அவர்கள் விளக்கமளிக்க மருத்துவ கல்லூரி இயக்குநரகம் உத்தரவிட்டது.அதன்பின்னர்,தேசிய […]
தமிழகத்தில் மே தினத்தை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,நேற்று ஒரே நாளில் ரூ.252.34 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.54.89 கோடிக்கும்,சென்னையில் ரூ.52.28 கோடிக்கும்,திருச்சியில் ரூ.49.78 கோடிக்கும் மதுப் பாட்டில்கள் விற்பனையாகியுள்ளது.மேலும்,சேலம் மண்டலத்தில் ரூ.48.67 கோடி,கோவையில் ரூ.46.72 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மே 1 ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில், மே தின நினைவு சின்னத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். குறிப்பாக தொழிலாளர்களின் உழைப்பை போற்றும் வகையில் முதல்வர் உட்பட நூற்றுக்கணக்கானோர் சிவப்பு நிற ஆடை அணிந்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து,மே தின உறுதிமொழி ஏற்றுக்கொண்ட பின்னர் முதல்வர் கூறியதாவது:”கட்டுமான தொழிலாளர்களின் திருமண உதவித்தொகை இதுவரை ஆண்களுக்கு ரூ.3000 மற்றும் […]
உழைக்கும் மக்களின் உயர்வை போற்றும் வகையில் இன்று நாடு முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது.உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம்,தனது திறமையால் வளர்ந்து தமிழகத்தின் முன்னணி நடிகராக தடம் பதித்துள்ள தன்னம்பிக்கை நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளும் இன்றைய தினத்திலேயே வருகிறது.இந்நிலையில்,அரசியல் பிரமுகர்கள்,சினிமா பிரபலங்கள்,ரசிகர்கள் உட்பட பலரும் நடிகர் அஜித் அவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் […]
தமிழகத்தில் இனி வருடத்திற்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்படி,ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நாட்கள் மட்டுமல்லாது மார்ச் 22, நவம்பர் 1 ஆகிய நாட்களிலும் என 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனிடையே,தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் […]
சென்னை:இன்று 25-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,ஏப்ரல் 6 ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்களால் கடைசியாக பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்பட்டது,மேலும் ஒரு பதினைந்து நாட்களில் விலைகள் லிட்டருக்கு ரூ.10 வரை அதிகரித்தது. இந்நிலையில்,சென்னையில் இன்று 25-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை.அதன்படி,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் […]
ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறையில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு ரூ.121 கோடி விடுவிப்பு என முதலமைச்சர் தகவல். திண்டுக்கலில் ஏற்கனவே நிறைவடைந்த ரூ.40.45 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகளை தொடக்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.206.54 கோடி மதிப்பிலான 285 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மொத்தம் 54,230 பயனாளிகளுக்கு ரூ.364.95 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதன்பின் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், திண்டுக்கல் மாவட்டத்துக்கான காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ரூ.95.5 கோடியில் மேம்படுத்தப்படும் […]
நடிகர் ரஜினிகாந்துக்கு உத்தரவிடக்கோரி சினிமா பைனான்சியர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா, சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் ரூ.65 லட்சம் கடன் பெற்றதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. சினிமா பைனான்சியரிடம் பெற்ற கடனை திருப்பி தரவில்லை என்றால் ரஜினி தருவார் என கஸ்தூரி ராஜா, முகுந்த் சந்த் போத்ராவுக்கு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. பெயரை தவறாக பயன்படுத்திய கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ரஜினிக்கு உத்தரவிடக்கோரி […]
நாளை மறுநாள் முதல் 13-ம் தேதி வரை ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. 2022 -23 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை (PG) பொறியியல், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (TANCET) எழுத வேண்டும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதன்படி, வரும் கல்வியாண்டில் முதுநிலை பொறியியல், MBA, MCA மற்றும் ME/ M.Tech/ M. Arch/ M.Plan படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மார்ச் […]
தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 லிருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கி இருப்பதால், ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டிவதைக்கிறது. இந்த சமயத்தில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பதால் […]
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு. மின்வெட்டு குறித்து உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் கூறுகையில், மின்வெட்டு குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களையும், அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும், நேற்று தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 388.10 மில்லியன் யூனிட் […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் 3 நாட்கள் பயணமாக இன்று இலங்கை புறப்பட்டு சென்றுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று இலங்கை புறப்பட்டு சென்றுள்ளார். இலங்கை தமிழ் எம்பிக்கள் அழைப்பின் பேரில் அவர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 3 நாட்கள் பயணமாக இலங்கை சென்றுள்ள அண்ணாமலை அவர்கள் நாளை அங்கு நடைபெறும் தொழிலாளர் தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். மேலும், தமிழர்கள் வசிக்கும் பகுதி உள்பட பல இடங்களுக்கும் நேரில் […]
தமிழ் நாட்டில் 2 நாளில் 2 முறை உச்சத்தை தொட்ட மின்சார பயன்பாடு. அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட். தமிழகத்தில் ஒருநாள் மின்பயன்பாடு வரலாற்றில் இல்லாத வகையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் அதிக அளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருந்த நிலையில், மின்சார பயன்பாடு 2 நாளில் 2 முறை உச்சத்தை தொட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தனது ட்விட்டர், ‘நேற்று 29/04/22 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 388.10 […]
மசாஜ் நிலையங்களில் சோதனையிட உள்ளூர் போலீசுக்கு அதிகாரம் உண்டு என உயர் நீதிமன்றம் உத்தரவு. சென்னை அண்ணா நகரில் இருக்கக்கூடிய தனியார் மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் மசாஜ் நிலையம் உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் வழக்கு தொடுத்திருந்த நிலையில், இந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து, […]
சென்னை ஐஐடியில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 196ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஐஐடியில் கடந்த சில நாட்களாகவே படிப்பிடிப்பாக மாணவர்கள் உள்பட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதகிருஷ்ணன் கூறுகையில், இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை. ஆனாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். […]
தேனி மாவட்டத்தில் நவீன அரிசி ஆலை தொடங்கப்படும் என பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த பின் முதல்வர் உரை. இன்று தேனி மாவட்டம் சென்றுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அதில், ரூ.114.21 கோடியில் புதிய திட்ட பணிகளை தொடக்கி வைத்தார். ஊஞ்சம்பட்டியில் அரசு விழாவில் ரூ.74.21 கோடியில் 102 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினர். இதுபோன்று ரூ.300 கோடி மதிப்பீட்டில் நடந்து முடிந்த திட்ட பணிகளை […]