தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டமானது சோதனையில் இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற நிலையில்,இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி,நகர்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியத்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து,செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:செங்கல்பட்டு,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 169 இடங்களில் நேரடி […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்களால் கடைசியாக பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்பட்டு ரூ.10 வரை அதிகரித்தது.உள்ளூர் வரிகள்,VAT (மதிப்புக் கூட்டப்பட்ட வரி),சரக்குக் கட்டணம் போன்ற காரணிகளைப் பொறுத்து பெட்ரோல் விலையில் மாற்றம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். இந்நிலையில்,சென்னையில் இன்று 27-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை.அதன்படி,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், […]
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. 505 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் […]
வரவேற்கத்தக்க சென்னை பெயர் மாற்றங்கள், அடைமொழிகளைத் தவிர்த்து பெயர் சூட்டுவது நல்லது என ஆசிரியர் கி.வீரமணி ட்வீட். முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என அழைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து ஆசிரியர் கி.வீரமணி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… வரவேற்கத்தக்க சென்னை பெயர் மாற்றங்கள்: அடைமொழிகளைத் தவிர்த்து பெயர் சூட்டுவது நல்லது! கிழக்குக் […]
வரும் 4-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள மானிய கோரிக்கை மீதான விவாதம் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை. வரும் 4-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள மானிய கோரிக்கை மீதான விவாதம் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை செயலத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். உள்துறை, போக்குவரத்து, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், அற நிலையத் துறை மானிய கோரிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் துறைசார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், […]
வருகைப்பதிவேட்டில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி ஒருவர், ஒரே நாளில் 10 நாட்களுக்கான வருகை பதிவுக்கு கையெழுத்திடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து விசாரிப்பதற்கு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் பாலாஜி உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவமனை வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் டிடி நெக்ஸ்ட் பேப்பர் ஆகியவற்றில் […]
10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் 3,119 மையங்களில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் கடந்த பிப்ரவரி 1 முதல் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என தெரிவித்ததை அடுத்து, அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது. அதன்படி 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கடந்த வாரம் முதல் மாணவர்களுக்கு செய்முறை […]
ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை. ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சரக் சபத் என்ற சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. ஏற்கனவே நேற்று மதுரை மருத்துவ கல்லூரியில் மட்டும் சரத் சபத் என்ற சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்படவில்லை, ராமநாதபுரத்திலும் மார்ச் 11-ஆம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டதாக வீடியோ பரவியது. அங்கு இப்போகிரேடிக், சரக் சபத், உடற்கூறுவியல் என 3 உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டோம் என கல்லூரி டீன் […]
மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்பார் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கடிதம் மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன்,பி.மூர்த்தி,மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர்,கல்லூரி முதல்வர் ரத்னவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது வழக்கமான உறுதிமொழிக்கு பதிலாக மாணவர்கள் சமஸ்கிருதத்தில் மகரிஷி சரம் சப்த் உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து, மதுரை மருத்துவக் கல்லூரியில் […]
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்திய அணியை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்திய அணியை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்திய அணியின் ஆலோசராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இளம் கிராண்ட் மாஸ்டர் குக்கீஸ், பிரக்ஞானந்தா, அதிபன், ஹரிகிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். […]
ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஓபிஎஸ் ட்வீட் நாளை நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘ ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, நல்லதை மட்டுமே மனதில் நிலைநிறுத்தி, அனைவரும் நலம்பெற்று வாழ வேண்டும் என்ற உயரிய நோக்குடன் ஈகைத் திருநாளாம் ரமலான் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடவிருக்கும் அனைத்து இஸ்லாமியப் பெருமக்களுக்கும் எனது அன்பார்ந்த நல்வாழ்த்துகள்!’ என பதிவிட்டுள்ளார். ரமலான் மாதத்தில் […]
ஒரு நல்ல, மூத்த டாக்டரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை என ப.சிதம்பரம் ட்வீட். மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன்,பி.மூர்த்தி,மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர்,கல்லூரி முதல்வர் ரத்னவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது வழக்கமான உறுதிமொழிக்கு பதிலாக மாணவர்கள் சமஸ்கிருதத்தில் மகரிஷி சரம் சப்த் உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து, மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி ஏற்ற விவகாரத்தில் கல்லூரி […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட […]
கூடிய விரைவில் தமிழ்நாடு கருணாநிதி நாடு என்று கூட மாற்றப்படலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என அழைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அம்மா உணவகத்தை குறைத்து கருணாநிதி உணவகங்கள் அதிகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மக்கள் விரும்ப மாட்டார்கள். திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் […]
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கி செல்வதற்கு திராவிட கழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தருமபுரம் ஆதினம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்ல தடை விதித்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டார்.
இலங்கையில் அத்தியவசிய பொருட்கள் விலை உயர்வு,உயிர்காக்கும் மருந்துகள்,எரிபொருள் போன்றவற்றிற்கு தட்டுப்பாடு நிலவுகிறது.இந்த சூழலில்,இலங்கைக்கு ரூ.80 கோடி மதிப்புள்ள 40,000 டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்புள்ள 137 அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், ரூ.15 கோடி மதிப்புள்ள 500 டன் பால் பவுடரை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது எனவும், இந்திய தூதரகம் வழியாக தான் இலங்கை மக்களுக்கு உதவி பொருட்களை அனுப்பி வைக்க முடியும் என்பதால் தேவையான உதவிகள் மற்றும் ஏற்பாடுகளை செய்து தரக் கோரி […]
பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து முடிவு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல். தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், விடுமுறை மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த அறிவிப்பு விரைவில் முதல்வர் அலுவலகத்தில் இருந்து வெளியாகும் என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார். கொரோனா காலத்தில் விடுமுறை அளிக்கப்படாதல் பாடங்கள் நடத்தி முடிக்கப்படாமல் இருக்கிறது என்றும் […]
அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில்,எம்பிஏ,எம்சிஏ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆண்டு தோறும் அண்ணா பல்கலைக் கழகத்தால் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) நடத்தப்படுகிறது. அந்த வகையில்,நடப்பு ஆண்டில் தமிழகத்தில் டான்செட் தேர்வு மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.குறிப்பாக, எம்சிஏ படிப்புகளுக்கு மே 14 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும்,பிற்பகல் 2:30 முதல் மாலை […]
கடந்த ஆண்டு இதே நாளில்தான் திமுக வெற்றி பெற்றது என்று மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் விழாவில் முதல்வர் உரை. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. அப்போது, மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 3,000 பேர் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதன்பின்னர் இவ்விழாவில் திமுகவில் இனைந்தவர்களை வரவேற்று முதலமைச்சர் உரையாற்றினார். அவரது உரையில், ஆட்சியில் இருந்தாலும், […]
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பிற்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும்,11 ஆம் வகுப்பிற்கு மே 9 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலும்,12 ஆம் வகுப்பிற்கு மே 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.இதனிடையே,கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்தவில்லை […]