இலங்கை மக்களுக்கு நிவாரணத்திற்காக திமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்டும் என முக ஸ்டாலின் அறிவிப்பு. இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக எம்.எல்.ஏ.க்களின் ஒருமாத ஊதியம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திமுக நிதி உதவி அறிவித்துள்ளது என தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவி வரும் […]
தமிழை போன்று சமஸ்கிருதம் உன்னதமான மொழிகளில் ஒன்று என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் கருத்து. தமிழகத்தில் மதுரை மருத்துவக் கல்லூரியில் ஹிப்போக்ரடிக் உறுதிமொழிக்கு மாறாக, சமஸ்கிருதத்தில் மாணவர்களை உறுதிமொழி எடுக்க வைத்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சையில் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதுபோன்று ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளுவோம் என மருத்துவக்கல்வி இயக்குனர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சமஸ்கிருதம் […]
மே 5ம் தேதி சென்னையில் உணவகங்களுக்கு காலை ஒருவேளை விடுமுறை என சென்னை ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு. இதுதொடர்பாக சென்னை ஓட்டல்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை ஓட்டல்கள் சங்கத்தின் 2022ம் நிதி ஆண்டின் முதல் செயற்குழு மற்றும் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் கட்டிடத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எரிவாயு, பெட்ரோலிய பொருள் விலையேற்றத்தால் உணவகங்களின் பாதிப்புகள், மூலதனப் பொருட்களின் விலையேற்றம், குறிப்பாக சமையல் எண்ணெய், பருப்பு இவற்றின் விலை உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. அவற்றின் […]
10, 11, 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவுறுத்தல். தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 10, 11, 12-ஆம் வகுப்பு […]
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறையில் தேர்வு எழுதும் போது, முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயமில்லை என சுகாதாரத்துறை அறிவிப்பு. தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பொதுத்தேர்வில் போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த […]
இலங்கை மக்களுக்கு உதவ நிதியுதவி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள். இலங்கை மக்களுக்கு உதவ நிதியுதவி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு. அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இதற்கான ஒன்றிய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து […]
தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பிய சுற்றறிக்கையை குழப்பத்திற்கு காரணம் என சம்ஸ்கிருத உறுதிமொழி விவகாரத்தில் மருத்துவக் கல்வி இயக்குநர் விளக்கம். மதுரை மருத்துவ கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள கல்லூரி முதல்வர் ரத்னவேல் மற்றும் மாணவர்களிடையே மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு விசாரணை மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சுற்றறிக்கையால் வந்த குழப்பதால் தான் சமஸ்கிருத மொழியில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. NMC சுற்றறிக்கை பற்றி விளக்கம் பெறாமல் […]
வங்கக்கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் வருகின்ற மே 6 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.மேலும்,இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மே 6 -க்கு பிறகு மேலும் தீவிரமடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதே சமயம்,தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டி வதைக்கும் நிலையில்,மேலும் அடுத்த 3 நாட்களுக்கு தீவிர வெப்பநிலை தமிழகத்தில் தொடரும் எனவும் இந்திய வானிலை மையம் […]
தமிழகத்தில் வழக்குகளில் கைதாகும் நபர்களிடம் காவல் நிலையங்களில் வைத்து இரவு நேரத்தில் விசாரணை நடத்தக்கூடாது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவில் அவர் கூறியதாவது: “தமிழகத்தில் பகலில் கைது செய்யப்பட்டவர்களை மாலை 6 மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும்.குறிப்பாக,காவல்நிலையங்களில் கைதிகளிடம் இரவில் விசாரணை நடத்தக் கூடாது”,என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னை,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் விசாரணைக் கைதிகள் இருவர் உயிரிழந்த விவகாரம் சர்ச்சை பெரும் ஆன நிலையில்,தற்போது டிஜிபி […]
மது மற்றும் போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல். தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்து மாணவர்கள் தொட்டுவிடும் தொலைவில் போதையை வைத்து விட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி என்ன பயன் விளையும்? என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மது மற்றும் போதை பழக்கத்தில் இருந்து மாணவர்களை விடுவிக்க வேண்டும். மது அருந்துவதும் போதையில் வன்முறையில் ஈடுபடுவதும் தான் சாகசம் என்ற தவறான எண்ணம் […]
கடந்த 2020-ஆண்டும் ஜூன் 19-ம் தேதி சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு,காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து சாத்தான் குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்,சார்பு ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் என மொத்தம் 10 பேரை கைது செய்தனர்.இதில்,பால்துரை என்பவர் அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார்.மேலும்,இந்த தந்தை […]
தேர்வு மையத்திற்கு காலை உணவு சாப்பிட்ட பின் வருகை புரிதல் வேண்டும் என பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவுறுத்தல். தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என கட்டுப்பாடுகளும் […]
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கி செல்வதற்கு திராவிட கழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.இந்த நிலையில், தருமபுரம் ஆதினம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்ல தடை விதித்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி நேற்று உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில்,தனது உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் தானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுப்பதாகவும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக […]
மருத்துவர் ரத்தினவேலை மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்க தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல். மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், கல்லூரி முதல்வர் ரத்னவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது மாணவர்கள் சமஸ்கிருதத்தில் மகரிஷி சரக் சப்த் உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து, மேடையில் பேசிய அமைச்சர் பிடிஆர், சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கபட்டது அதிர்ச்சியளிக்கிறது […]
சின்னக் கலைவாணர் விவேக் சாலை என்ற பெயர் பலகையை திறந்து வைத்தார் மருத்துவத்துறை அமைச்சர். பிரபல நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் 17ல் மாரடைப்பால் காலமானார். கோவில்பட்டியில் பிறந்த விவேக், சென்னை, தலைமை செயலகத்தில் ஊழியராக பணியாற்றியவர். பாலசந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படம் மூல தமிழ் சினிமாவில் அறிமுகமானார். துணை நடிகர் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்தது மட்டுமின்றி, மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் சினிமா துறையில் மட்டுமல்லாது, […]
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம். நாட்டில் தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாட்டால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பல மாநிலங்களில் மின் தடை நிலவுகிறது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 3 யூனிட்டுகளில் மொத்தம் 630 மெகாவாட் மின் உற்பத்தி […]
பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் விநியோகிக்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவு. தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறுகிறது. அதன்படி, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற 5ம் தேதி முதல் தொடங்குகிறது. இதேபோல் பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 10ம் தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதியும் தேர்வுகள் தொடங்கவுள்ளன. தமிழகம் […]
பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும்.மேலும்,ஏதாவது முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள்.இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு.இந்த வேளையில்,அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் தங்கம் வாங்க ஏராளமான மக்கள் ஆர்வம் காட்டுவர்.ஏனெனில்,அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் பொன் செரும் என்பது நம்பிக்கை. இந்நிலையில்,அட்சயதிருதியை முன்னிட்டு இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் […]
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து கடுமையான வெப்பம் நிலவுகிறது.அந்த வகையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியுள்ளது.மற்ற மாவட்டங்களில் சதத்தை நோக்கி வெப்பம் அதிகரித்து வருகிறது.குறிப்பாக கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பல இடங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில்,நாளை முதல் மே 28ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கொளுத்த உள்ளது.ஏற்கனவே பல மாவட்டங்களில் 108 பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் வாட்டி வதைக்கும் […]
தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டமானது சோதனையில் இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற நிலையில்,இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி,நகர்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியத்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து,செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:செங்கல்பட்டு,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 169 இடங்களில் நேரடி […]