தருமபுரம் ஆதினம் பட்டிணப் பிரவேசத்திற்கு தடையை நீக்கக் கோரி பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம். மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச்செல்ல தடை விதிக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கி செல்வதற்கு திராவிட கழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தருமபுரம் ஆதினம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கி செல்ல தடை விதித்து கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து, உயிரே போனாலும் பரவாயில்லை […]
தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறுகிறது. அதன்படி, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நாளை (மே 5-ஆம் தேதி) முதல் தொடங்குகிறது. அதைப்போல்,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 ஆம் தேதியும்,பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 10 ஆம் தேதியும் தேர்வுகள் தொடங்கவுள்ளன. தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வுகள் சுமார் 3,119 மையங்களில் நடைபெறுகிறது என ஏற்கனவே தேர்வுத்துறை […]
கோடநாடு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் இன்று விசாரணை. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 நாட்கள் விசாரணை நடந்த நிலையில், இன்று 3வது நாளாக தனிப்படையினர் விசாரிக்கின்றனர். கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப். 24-ம் தேதி கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக […]
சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை உள்ளிட்டவை குறித்து மருத்துவக் கல்லூரி டீன்களுடன் இன்று முக்கிய ஆலோசனை. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பிற்பகலில் அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். மதுரை, ராமநாதபுரம் மருத்துவ கல்லூரிகளில் சமஸ்கிருத உறுதிமொழியை மாணவர்கள் ஏற்ற நிலையில், மருத்துவக்கல்லுரி டீன்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை, மருத்துவக் கழிவுகளை கையாள்வது மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. மதுரை […]
அவசியம் இல்லாமல் பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அமைச்சர் அறிவுறுத்தல். தமிழகத்தில் கோடைக்காலம் என்பதால் கடுமையான வெப்பம் நிலவுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியுள்ளது. இதனால் மக்கள் சீராமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இன்று முதல் மே 28 ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. […]
பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும்.மேலும்,ஏதாவது முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள்.இந்த வேளையில்,அட்சய திருதியை நேற்று கொண்டாடப்பட்டது.இந்த நாளில் தங்கம் வாங்க ஏராளமான மக்கள் ஆர்வம் காட்டுவர்.ஏனெனில்,அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் பொன் செரும் என்பது நம்பிக்கை. இந்த வேளையில்,அட்சயதிருதியை முன்னிட்டு நேற்று இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில்,தங்கத்தின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது.இதனால் நேற்று அதிகாலை முதலே நகைக்கடைகளில் மக்களின் […]
விருதுநகர் மாவட்டம்,சாத்தூர் கத்தாளப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.வெடி விபத்து ஏற்பட்டதில் ஒரு அறை தரைமட்டமானதில் சோலை விக்னேஸ்வரன் என்ற 25 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று கூறப்படுகிறது. வெடிவிபத்து ஏற்பட்ட ஆலையில் மேலும் சிலர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.இந்த தகவலையறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியிலும்,மறுபுறம் உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியிலும் ஈடுப்பட்டுள்ளனர். இதனையடுத்து,பட்டாசுக்கு தேவையான மூலப் பொருட்களை கலவை […]
தமிழக சட்டப்பேரவை நான்கு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடும் நிலையில்,இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.அதன்படி எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் பதிலளித்து,பின்னர்,புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனர். மேலும்,2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி(திருத்த) சட்ட முன்வடிவு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களால் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.குமரியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு நவீன படகுகள் வாங்குவது குறித்து […]
1-9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து இன்று முதல்வர் ஆலோசனை! தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னதாக தெரிவித்திருந்தார்.மேலும்,கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், விடுமுறை மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த அறிவிப்பு விரைவில் முதல்வர் அலுவலகத்தில் இருந்து வெளியாகும் என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.கொரோனா காலத்தில் விடுமுறை அளிக்கப்படாதல் பாடங்கள் நடத்தி […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்களால் கடைசியாக பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்பட்டு ரூ.10 வரை அதிகரித்தது.உள்ளூர் வரிகள்,VAT (மதிப்புக் கூட்டப்பட்ட வரி),சரக்குக் கட்டணம் போன்ற காரணிகளைப் பொறுத்து பெட்ரோல் விலையில் மாற்றம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். இந்நிலையில்,சென்னையில் இன்று 28-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை.அதன்படி,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் […]
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து கடுமையான வெப்பம் நிலவுகிறது.அந்த வகையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியுள்ளது.மற்ற மாவட்டங்களில் சதத்தை நோக்கி வெப்பம் அதிகரித்து வருகிறது.குறிப்பாக கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பல இடங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. அக்னி நட்சத்திரம்: இந்நிலையில்,இன்று முதல் மே 28 ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் கொளுத்த உள்ளது. ஏற்கனவே பல மாவட்டங்களில் 100 பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் […]
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவுமாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை இனவாத அரசாங்கத்தின் இணவளிப்போர் காரணமாக அந்நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியில் ஈழச்சொந்தங்கள் மட்டுமல்லாது, சிங்கள மக்களும் சிக்குண்டு சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், அங்கிருந்து வரும் செய்திகள் பெருங்கவலை அளிக்கின்றன. ராஜபக்சே அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மக்கள் இரண்டு மாதக்காலத்திற்கும் மேலாகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், போராடும் மக்கள் […]
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. 488 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 24 […]
தமிழகத்தில் 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. அதன்படி, அதிகபட்சமாக வேலூரில் 105, திருத்தணி, திருச்சியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. மேலும், மதுரை விமான நிலையம் 103, ஈரோடு, கரூர், பரமத்தி, தஞ்சை, மதுரையில் தலா 102 டிகிரி, சேலம் 101, பாளையங்கோட்டை 100 டிகிரி […]
இலங்கை தேசிய கீதத்திலிருந்து தமிழை விலக்கியிருப்பது கண்டனத்துக்கு உரியது என ஆசிரியர் கி.வீரமணி ட்வீட். இலங்கை தேசிய கீதத்திலிருந்து தமிழை விலக்கியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து ஆசிரியர் கே.வீரமணி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியான சூழலில் மக்கள் சொல்லொண்ணாத் துயரத்தில் பரிதவிக்கும் நிலையில், ஈழத் தமிழர்களுக்கு இலங்கை சிங்கள இனவாத அரசால் ஏற்பட்ட இன அழிவை (Genocide) எல்லாம் மறந்து தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் […]
வெளிநாட்டில் வேலைக்காக செல்வோர் பணி விசா பெற்று செல்லவும், சுற்றுலா விசா பயன்படுத்த வேண்டாம் என தாம்பரம் ஆணையர் ரவி அறிவுறுத்தியுள்ளார். வீட்டு வேலைக்கு சென்று குவைத்தில் சிக்கி தவித்த மஞ்சுளா என்ற பெண்மணி 5 நாட்களில் மீட்கப்பட்டார் என்றும் பெண்ணை விரைவாக மீட்ட பல்லாவரம் நுண்ணறிவு பிரிவு போலீசார், உதவி ஆணையருக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆணையர், விசாரிக்காமல் வெளிநாடு செல்ல வேண்டாம் என்றும் பணி விசா எடுத்து முறைப்படி செல்ல […]
பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் செல்போன் எடுத்துவர தடை விதித்து தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு. தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் செல்போன்கள் வைத்திருப்பதற்கு தடை விதித்து தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன்/ இதர தகவல் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, […]
இலங்கை மக்களுக்கு நிவாரணத்திற்காக திமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்டும் என முக ஸ்டாலின் அறிவிப்பு. இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக எம்.எல்.ஏ.க்களின் ஒருமாத ஊதியம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திமுக நிதி உதவி அறிவித்துள்ளது என தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவி வரும் […]
தமிழை போன்று சமஸ்கிருதம் உன்னதமான மொழிகளில் ஒன்று என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் கருத்து. தமிழகத்தில் மதுரை மருத்துவக் கல்லூரியில் ஹிப்போக்ரடிக் உறுதிமொழிக்கு மாறாக, சமஸ்கிருதத்தில் மாணவர்களை உறுதிமொழி எடுக்க வைத்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சையில் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதுபோன்று ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளுவோம் என மருத்துவக்கல்வி இயக்குனர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சமஸ்கிருதம் […]
மே 5ம் தேதி சென்னையில் உணவகங்களுக்கு காலை ஒருவேளை விடுமுறை என சென்னை ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு. இதுதொடர்பாக சென்னை ஓட்டல்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை ஓட்டல்கள் சங்கத்தின் 2022ம் நிதி ஆண்டின் முதல் செயற்குழு மற்றும் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் கட்டிடத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எரிவாயு, பெட்ரோலிய பொருள் விலையேற்றத்தால் உணவகங்களின் பாதிப்புகள், மூலதனப் பொருட்களின் விலையேற்றம், குறிப்பாக சமையல் எண்ணெய், பருப்பு இவற்றின் விலை உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. அவற்றின் […]