“சமஸ்கிருதம் உன்னதமான மொழி” – சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழை போன்று சமஸ்கிருதம் உன்னதமான மொழிகளில் ஒன்று என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் கருத்து.
தமிழகத்தில் மதுரை மருத்துவக் கல்லூரியில் ஹிப்போக்ரடிக் உறுதிமொழிக்கு மாறாக, சமஸ்கிருதத்தில் மாணவர்களை உறுதிமொழி எடுக்க வைத்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சையில் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதுபோன்று ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளுவோம் என மருத்துவக்கல்வி இயக்குனர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சமஸ்கிருதம் உறுதிமொழி குறித்த சர்ச்சை வலுத்து வரும் நிலையில், இதுகுறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழை போன்று சமஸ்கிருதம் உன்னதமான மொழிகளில் ஒன்று என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், இலங்கை தமிழர்களின் நலனில் பாஜக எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. கச்சத்தீவை மீட்பது பாஜகவின் கொள்கைகளில் ஒன்று, விரைவில் கச்சத்தீவு இந்திய எல்லைக்குள் ஒன்றாகும் என குறிப்பிட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025