தமிழ்நாடு

ஆயிரம், ஐநூறுக்கு மக்களை கையேந்த விட்டது யார்? காங்கிரஸுடன் கூட்டணி எதற்கு? – சீமான்

ஈரோட்டில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு குடும்ப தலைவி அனைவருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்கள், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தகுதியுள்ள பெண்களுக்கு தான் உரிமைத்தொகை வழங்கப்படும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள். தகுதியை கணக்கீடு நீங்கள் யார்?, எதுவுமே இருக்க கூடாது என்றால் பிச்சைக்காரியாக தான் இருக்க வேண்டும் என திமுகவை கடுமையாக விமர்சித்தார். திமுகவினருக்கு கொடுப்பார்கள், […]

6 Min Read
Manipur video seeman

செந்தில் பாலாஜி உயிரை காப்பாற்றிய அமலாக்கத்துறைக்கு முதலமைச்சர் நன்றி சொல்ல வேண்டும் – ஹெச்.ராஜா

காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழக முதல்வர் அவர்கள் தனது மெண்டல் பாலன்ஸை அவர் இழந்துள்ளார் என்பதை சமீப காலங்களில் அவர்  பேசும் பேச்சுக்கள் மூலம் தெரிகிறது. செந்தில் பாலாஜிக்கு இதய கோளாறு வரும் அளவிற்கு மத்திய அரசு நடந்து கொண்டதாக பேசியுள்ளார். எங்களை சீண்டி பார்க்க வேண்டாம். எங்களோட சீண்டலை எதிர்கொள்ளும் அளவில் திமுக இல்லை. திமுகவில் இருப்பவர்கள் எல்லாம் கிழடுகட்டைகள் தான் என  தெரிவித்துள்ளார். […]

3 Min Read
hraja

பிரதமர் அறிவித்த விஸ்வகர்மா திட்டம்… போராட்டத்தை அறிவித்த திராவிடர் கழகம்.! 

கடந்த சுதந்திர தின விழாவின் போது பிரதமர் நரேந்திர மோடி விஸ்வகர்மா திட்டம் பற்றி அறிவித்தார். பாரம்பரிய தொழில் செய்வோருக்கு அவர்கள் தொழிலை ஊக்கப்படுத்தும் நோக்கில் நிதியுதவி வழங்கப்படும் எனவும், இதற்காக 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவித்தார். அதன் படி , சில தினங்களில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த பரம்பரை தொழில் முறைக்கு மத்திய அரசு அறிவித்துள்ள விஸ்வகர்மா திட்டத்திற்கு பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதனால் தந்தை […]

7 Min Read
PM Modi - Dravidar Kazhagam Leader K Veeramani

விநாயகர் சிலை ஊர்வலம்.! கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதில் கூற உயர்நீதிமன்றம் உத்தரவு.!

வரும் செப்டம்பர் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கு விநாயகர் சிலை வைத்து வழிப்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கோரிக்கைகள் எழுகின்றன. சட்ட ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது என்பதால் சிலை வைத்து வழிபட கோருவோர் முன்னதாக காவல்துறை அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இது தொடர்பாக வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் வரும் செப்டம்பர் 19 முதல் 25ஆம் […]

3 Min Read
Madurai High Court - Vinayagar Chathurthi

எங்கு நடந்தாலும் சுயமரியாதை திருமணம் செல்லும்.! உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

கடந்த ஏப்ரல் மாதம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளவரசன் என்பவர் திருப்பூரில் வைத்து ஒரு பெண்ணை சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து, அந்த பெண்ணின் பெற்றோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இதனையடுத்து, இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், இந்து திருமண சட்டப்படி வழக்கறிஞர்கள் முன் நடைபெற்ற திருமணம் செல்லாது என உத்தரவிட்டனர். இந்த நிலையில்,  மதுரை உயர்நீதிமன்ற கிளை  உத்தரவை எதிர்த்து இளவரசன் தரப்பில் […]

3 Min Read
Supreme court of india

இன்னும் 40 நாட்களில் வடகிழக்கு பருவமழை.. வடிகால் பணிகளை நாளை ஆய்வு செய்யும் முதல்வர்!

வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் 40 நாட்களே உள்ள நிலையில், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை நாளை ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இரண்டாம் கட்ட பணிகள் நிறைவடையாமல் பல இடங்களில் அபாயகரமான நிலையில் பள்ளங்கள் உள்ளன என கூறப்படுகிறது. மழைநீர் வடிகாலுக்கு தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் அவலம் நிலை உள்ளது. எனவே, இந்த சமயத்தில் சென்னையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை […]

2 Min Read
mk stalin

தமிழ்நாட்டுக்கு 24,000 கன அடி நீர் திறக்க வேண்டும் – அமைச்சர் துரைமுருகன் பேட்டி

தமிழ்நாட்டுக்கு 24,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என இன்று நடக்கும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறப்பது போதாது. தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 24,000 கன அடி நீர் கிடைத்தால் தான் நன்றாக இருக்கும். இது இன்று டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்றார். மேலும், தண்ணீர் […]

3 Min Read
minister duraimurugan

சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் ஆஜராக உத்தரவு!

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், 2016-21-ம் காலகட்டத்தில் தன் பெயரிலும், தன்னுடைய மனைவி உள்ளிட்ட குடும்பத்தார் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.27 கோடி வரையிலும் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது விராலிமலை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கும் இவர், அமைச்சராக இருந்தபோது பல்வேறு ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2021 அக்டோபர் மாதம் விஜயபாஸ்கர் தொடர்புடைய 50-க்கும் […]

6 Min Read
vijayabaskar

11 வழக்குகளை ரத்து செய்ய முடியாது.! எச்.ராஜா கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம்.! 

பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்குகளை நீக்க கோரி அவர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. கடந்த 2018 முதல், அவரது டிவிட்டர் (தற்போது எக்ஸ் சமூக வலைத்தளம்) பக்கத்தில் பெரியார் சிலையை உடைப்பது என கருத்து வெளியிட்டது. திமுக எம்பி கனிமொழி பற்றி விமர்சித்தது, பெண் அரசு ஊழியர்கள் பற்றி விமர்சித்தது என எச்.ராஜா மீது 11 வழக்குகள் காவல்நிலையத்தில் பதியப்பட்டன. இந்த வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டு பதியப்பட்டது […]

3 Min Read
Chennai High Court - H Raja

ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ முறையிட்டுள்ளார்.  ஜாமீன் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என சென்னை சிறப்பு நீதிமன்றம் நேற்று கூறியிருந்தது. அதுமட்டுமில்லாமல், ஜாமீன் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை […]

3 Min Read
Senthil balaji case hc

மதுரை ரயில் தீ விபத்து – 40க்கும் மேற்பட்டோருக்கு சம்மன்!

மதுரையில் ரயில் பெட்டியில் தீ  குறித்து 40க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  லக்னோவில் இருந்து மதுரை வரையிலான ரயில் நிலைய ஊழியர்கள் 40க்கும் அதிகமானோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரயில் பெட்டியில் எரிவாயு சிலிண்டர், விறகு, அடுப்பு எப்படி கொண்டு வரப்பட்டது குறித்து விசாரணை நடத்தவும், ரயில் பெட்டியில் தீப்பற்ற கூடிய பொருட்கள் எப்படி அனுமதிக்கப்பட்டன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மதுரை அருகே சுற்றுலா ரயில் பெட்டியில் தீ விபத்து […]

3 Min Read
trainfire

பரனூர் டோல்கேட்டை இனி “பா ஜ க மாடல் டோல்கேட்” என்றே அழைக்கலாம்.! சு.வெங்கடேசன் எம்.பி

ஆளும் பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சி நிறைவடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு வருடமும் அந்த அரசினுடைய நிலையைப் பற்றி, அந்த அரசு செய்திருக்கக்கூடிய செலவுகளை பற்றி ஆய்வு செய்து, அதற்கு ஒரு ஒப்பீடு கொடுக்கும் சிஏஜி அறிக்கை ஆனது வெளியாகியுள்ளது. அதில் ஒன்றிய பாஜக அரசின் ஏழு ஊழல்களைப் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் உட்பட பலர் விமர்சித்து உள்ளனர். தற்போது இந்த சிஏஜி அறிக்கை தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், […]

3 Min Read
Su Venkatesan

காவேரி விவகாரம்.! 24,000 கனஅடி நீர் வேண்டும்.. 3000 கனஅடி நீர் தான் தருவோம்.. தமிழ்நாடு – கர்நாடகா வாதம்.!

காவேரியில் இருந்து தமிழகத்திற்கு காவேரி மேலாண்மை வாரிய உத்தரவின் படி கொடுக்கப்படவேண்டிய தண்ணீரை முறையாக கர்நாடக மாநில அரசு தராத காரணத்தால், குறிப்பிட்ட அளவின் படி தண்ணீர் திறந்துவிட கோரி தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்ட்டமும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. நேற்று காவேரி ஒழுங்கற்று குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டனர். இந்த ஒழுங்காற்று கூட்டத்தில் கர்நாடகா, […]

5 Min Read
Cauveri River

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வாழ்த்துவேன் – நடிகர் விஷால்

நடிகர் விஷால் தனது 45வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், நெருங்கிய நண்பர்கள என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஷால் தனது பிறந்தநாளையொட்டி சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கி மகிழ்ந்தார். மேலும், அந்த இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி, குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஆதரவற்றவர்களுக்கு […]

4 Min Read
actor vishal

இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட 10 மீனவர்கள் விமானம் மூலம் தமிழகம் வந்தனர்.! 

தமிழகத்தில் இருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை ராணுவம் கைது செய்யும் செயல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தை தீர்வு காண  தமிழக அரசு, மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், அவ்வப்போது கைது, பிறகு சில நாட்கள் கழித்து நிபந்தனைகளுடன் விடுதலை என நடந்து வருகிறது. அப்படி தான் தற்போது , நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த செந்தில்குமார் […]

4 Min Read
Tamilnadu Fisherman

பரபரப்பு..பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து..! 10 மாணவர்கள் படுகாயம்..!

கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே பெரிய பட்டு பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் வேன் ஒன்று, மாணவர்களை ஏற்றிக்கொண்டு பெத்தாங்குப்பத்தில் ரயில்வே  கேட் அருகே நின்று கொண்டிருந்துள்ளது. அப்பொழுது, வேன் ஓட்டுநர் கீழே இறங்கி நின்றபோது, வேனில் இருந்த குழந்தைகள் ஹேண்ட் பிரேக்கை ரிலீஸ் செய்துள்ளனர். இதனால் வேன் பின் பக்கம் சென்று தண்டவாளம் அருகே உள்ள வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 10 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த பள்ளி மாணவர்கள் கடலூர் அரசு […]

2 Min Read
Accident IMG

இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதி.. அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டம்!

தமிழ்நாட்டில் உள்ள இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த தகவல் தொழில்நுட்பத் துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இ சேவை மையங்களை DigiPay வரம்பிற்குள் கொண்டுவந்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இ-சேவை மையங்களில் ஆதார் பயோமெட்ரிக் வாயிலாக வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலக பகுதிகளிலும்,  கிராமபுற பகுதிகளிலும் தமிழக அரசின் பொது இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. […]

3 Min Read
TNeGA

B.E சேர்க்கை.. வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.! வெளியான புதிய அறிவிப்பு.! 

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 442 பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பம் பெற்று, கடந்த ஜூன் 22இல் 1,76,744 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது . மொத்தம் உள்ள 1.57 லட்சம் இடங்களில்  இதுவரை 1,06,641 இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டுள்ளது. விளையாட்டுப் பிரிவில் 385 மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 163 மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 137 மாணவர்கள், முதற்கட்ட பொதுக் கலந்தாய்வின் மூலம் 16,064 மாணவர்கள்  2ஆம் […]

4 Min Read
BE Counsiling

இன்றைய (29.8.2023) பெட்ரோல், டீசல் விலை..!

464-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது, இந்தியாவில் […]

3 Min Read
Today Petrol Rate

ஓணம் பண்டிகை..! இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களுக்கு அனுமதி.!

இந்தியாவின், தென்தமிழகத்திலும் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய திருவிழா ஓணம். ஆண்டு தோறும் இந்த பண்டிகை  10 நாட்கள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகை கடந்த 20ம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், இன்று 29ம் தேதி ஓணம் விருந்து படைத்து மக்கள்  இந்த பண்டிகையை கொண்டாடி முடிப்பார்கள். இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 Min Read
Vandalur Zoo