பரபரப்பு..பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து..! 10 மாணவர்கள் படுகாயம்..!

கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே பெரிய பட்டு பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் வேன் ஒன்று, மாணவர்களை ஏற்றிக்கொண்டு பெத்தாங்குப்பத்தில் ரயில்வே  கேட்

Accident IMG

கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே பெரிய பட்டு பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் வேன் ஒன்று, மாணவர்களை ஏற்றிக்கொண்டு பெத்தாங்குப்பத்தில் ரயில்வே  கேட் அருகே நின்று கொண்டிருந்துள்ளது.

அப்பொழுது, வேன் ஓட்டுநர் கீழே இறங்கி நின்றபோது, வேனில் இருந்த குழந்தைகள் ஹேண்ட் பிரேக்கை ரிலீஸ் செய்துள்ளனர். இதனால்வேன் பின் பக்கம் சென்று தண்டவாளம் அருகே உள்ள வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் 10 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த பள்ளி மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.