ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி அல்லி

Senthil balaji case hc

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ முறையிட்டுள்ளார்.  ஜாமீன் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என சென்னை சிறப்பு நீதிமன்றம் நேற்று கூறியிருந்தது.

அதுமட்டுமில்லாமல், ஜாமீன் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில், ஜாமீன் கோரி அவரது சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யபட்டுள்ளது.

இதனிடையே, செந்தில்பாலாஜிக்கு செப்-15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நேற்று சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த 3000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிடம் வழங்கப்பட்டுள்ளதோடு, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடுமாறும் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.