திருவள்ளூர் : தமிழ்நாடு மாநிலம் திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பெயிண்ட் தொழிற்சாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர், ஒரு பெண் பலத்த காயமடைந்தார்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் இணைந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ எறிந்து கொண்டிருந்த தொழிற்சாலையில் இருந்து கடும் புகை கிளம்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்தின் போது, தொழிற்சாலைக்குள் இருந்து சந்திரா என்ற பெண் மீட்கப்பட்ட நிலையில், இடிபாடுகளில் சிக்கிய மற்றொருவரை தேடும் பணி நேற்று தீவிரமாக நடைபெற்று வந்தது. நேற்றைய தினம் மூவர் உயிரிழந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) மேலும் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது, இதனால் பலி எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…