ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தை தொலைபேசி வாயிலாக மு.க அழகிரி நலம் விசாரித்துள்ளார்.
ரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து போனில் நலம் விசாரித்தேன் என முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி தெரிவித்ததாக கூறப்படுகிறது. 2 அல்லது 3 நாட்களில் சென்னை திரும்ப உள்ளதாக நடிகர் ரஜினி தொலைபேசியில் கூறினார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ரத்த அழுத்தத்தில் முன்னேற்றம் இருந்தாலும், ரத்த அழுத்தம் சற்று அதிகமாக உள்ளது. ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அவரை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ரஜினி எப்போது டிஸ்சார்ஜ் செய்வது என்பது பற்றி இன்று மாலை முடிவு வெளியிடப்படும் என கூறியுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் புதிதாக தொடங்கவுள்ள கட்சி குறித்த அறிவிப்பை வரும் 31-ஆம் தேதி வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். கட்சி பணிகள் வேகமாக நடைபெற்று நிலையில், தற்போது ரத்தம் அழுத்தம் காரணமாக மருத்துவனையில் ரஜினி அனுமதிக்கப்ட்டுள்ளார். சீக்கிரம் குணமடைந்து வரவேண்டும் என்பதே ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் வேண்டுதலாக உள்ளது. ஆனால், மருத்துவ பரிசோதனைகளில் கவலைப்படும் வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…