பெகாஸஸ் விவகாரம் : ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரஸ் போராட்டம்…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், ஆளுநர் மாளிகை முன்பதாக முற்றுகை போராட்டம்.
இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் பல்வேறு நாடுகளில் முக்கிய நபர்களின் செல்போன் உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தது.
பெகாஸஸ்
பிரான்ஸை சேர்ந்த Forbidden Stories என்ற ஊடக நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த THE WIRE மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
ஒட்டுக்கேட்பு
இந்தியாவை சேர்ந்த அரசியல் தலைவர்கள், நீதிபதிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோரின் தொலைபேசி எண்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், அலைபேசி எண்களின் பட்டியலில் ராகுல் காந்தி முன்பு பயன்படுத்திய இரண்டு எண்களும் இருந்ததாக கூறப்பட்டது.
மத்திய அரசு விளக்கம்
பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக பெகாஸஸ் மூலமாக யாரும் உளவு பார்க்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்து. ஆனால், எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்தது.
காங்கிரஸ் போராட்டம்
பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியினர் இது தொடர்பாக கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில், பெகாஸஸ் ஸ்பைவர் செயலி மூலம், எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை உளவு பார்க்கும் மத்திய அரசை கண்டித்தும், உச்சநீதிமன்ற நீதிபதியை வைத்து நீதி விசாரணை கோரியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், ஆளுநர் மாளிகை முன்பதாக முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025