சென்னை கிண்டி அடுத்துள்ள ஆதம்பாக்கம் நியூ காலனியில் உள்ள தனியார் குடியிருப்பு கட்டிடத்தில் மேலாடையின்றி உள்ளே நுழைந்த மர்மநபர், அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள ஒவ்வோரு வீட்டின் ஜன்னலாக திறந்து பார்த்து கையில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் பெண்களின் ஆடைகளை திருடிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் காலையில் எழுந்து பார்த்த போது மூடிய ஜன்னல் திறந்திருப்பதும், பெண்களின் ஆடைகள் திருடு போனதும் தெரியவந்தது. குடியிருப்புவாசிகள் அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது அதிகாலையில் மர்மநபர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் ஜன்னல்களை திறந்து பார்த்தது தெரியவந்தது.
இதையடுத்து குடியிருப்புவாசிகள் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி பெண்களின் ஆடைகளை மட்டும் திருடும் சைக்கோ யார்? எதற்காக பெண்களின் ஆடைகளை திருடுகிறார் என போலீசார் தீவிர விசாரணையில் நடத்தி வருகின்றனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…