ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 விடுதலை செய்ய வேண்டும் என தமிழகத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய தீர்மானத்தை உடனடியாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தரக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் 7 தமிழரையும் விடுதலை செய்ய மத்திய அரசு மறுத்து வருகிறது.
இதற்கிடையில் பேரறிவாளன், நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தொடர்ந்து பரோல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 மாதங்களாக பேரறிவாளன் பரோலில் உள்ளார். இந்நிலையில், பரோலில் இருந்தாலும் கூட அவரால் வெளியே செல்ல முடியவில்லை, யாரையும் பார்க்க முடியவில்லை, வீட்டுச்சிறை போல இருக்கிறார் எனவே பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என பேரறிவாளன் தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
ஜாமீன் கோரும் பேரறிவாளன் மனு மீதான விசாரணை இன்று பகல் 2 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…