தி.க வின் அடுத்த வாரிசு;
இந்த சர்ச்சைகளுக்கு முன், 1948 ம் ஆண்டு ஈரோட்டில் நடந்த மாநாட்டில் தனக்குப் பிறகு தனது கட்சியின் அண்ணாதான் தலைவர் என தெரிவித்து பெட்டிச் சாவியை அண்ணாவிடம் கொடுக்கிறேன் என்று கூறினார் தந்தை பெரியார், தனக்குப் பிறகு அண்ணா, தேர்தல் பாதையை தேர்ந்தெடுத்து சமரசத்திற்கு ஆட்பட்டுவிடுவார் என்கிற எண்ணம் தந்தை பெரியாருக்கு உறுதியாகவே அந்த முடிவைக் கைவிட்டார். இதன் பிறகு தனது வாரிசாக ஈவெகி சம்பத்தை நியமிக்க முயற்சி செய்தார், ஆனால் சம்பத்தும் அண்ணாவின் சீடராக இருப்பதைக் கண்டு அதையும் பாதியிலேயே நிறுத்திவிட்டார். இதனையடுத்து அவருக்கு மணியம்மையைத் தவிர வேறு யாரும் நம்பிக்கைக்கு உரியவர்களாக தெரியவில்லை. எனவே, அவர் மணியம்மையைத் தேர்ந்தெடுத்தார்.இதனால், அண்ணா இதையே காரணம் காட்டி தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.
அண்ணா- பெரியார் விரிசல் அடைந்த உறவு:
பெரியாரும் அண்ணாவும் சமூக நீதியையும், சமத்துவத்தையும் தங்கள் கொள்கைகளாக கொண்டவர்கள் என்றலும், தொடக்கத்தில் இருந்தே இருவேறு வழிமுறைகளில் நம்பிக்கை உடையவர்களாக இருந்திருக்கின்றனர். தந்தை பெரியாருக்கு தேசம், மொழி, இனம் என எவற்றிலும் நம்பிக்கை இல்லை. ஆனால் இவற்றிற்க்கு மாறாக அண்ணாவோ தேசியம், மொழி, இனம் ஆகியவற்றில் பற்றுடன் இருந்தார்.
இவற்றை முன்வைத்து மக்களை முன்னேற்ற முடியும் என்பதை அவர் தீர்க்கமாக நம்பினார். எனவே , மணியம்மையை பெரியார் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தாலும் அண்ணா விலகியிருப்பார் என்பதே வரலாறு நமக்குத் தரும் இறுதி முடிவு.
மணியம்மையை மணக்க உண்மையான காரணம்:
1949-ல் திமுகவினர் பெரியார் மீது வைத்த இந்த விமர்சனம் இன்றளவும் அவதூறாக அவர் மீது தொடர்ந்து சுமத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பெரியார், மணியம்மையை திருமணம் செய்வதற்கு பதிலாக அவரை மகளாகவோ அல்லது பாதுகாப்பளராகவோ தத்தெடுத்து இருந்தால் இந்த பிரிவினை ஏற்பட்டிருக்காது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையோ வேறு விதமாக இருக்கிறது.பெரியாரால் மணியம்மையை தத்தெடுத்திருக்கவே முடியாது என்கிறது அந்த தரவு. தந்தை பெரியார் இந்து மதத்தையும் அதன் வர்ணாசிரம தர்மத்தையும் எதிர்த்தாலும் அவர் அம்மதத்தில் இருந்து வெளியேறவில்லை இதற்கான விளக்கத்தை கொடுத்தால் இந்தக் கட்டுரை திசைதிரும்பிவிடும் என்பதே உண்மை. இதன்படி, இந்து சிவில் சட்டம், ஒரு பெண்ணுக்கு தத்தெடுக்கும் உரிமையும் கிடையாது. தத்துப்போகும் உரிமையும் கிடையாது என்கிறது. அவ்வாறு இருக்க தனக்கு பின்னால் தன்னுடைய கழகத்தையும் அதன் சொத்துக்களையும் நிர்வகிக்க மணியம்மையை தேர்ந்தெடுத்த பெரியாருக்கு அவரைத் திருமணம் செய்வதைத் தவிர வேறு சட்டப்பூர்வ வழி தெரிந்திருக்கவில்லை. மணியம்மையை திருமணம் செய்வதற்காக பெரியார் கடுமையாக விமர்சிக்கப்படுவாராயின் அந்த விமர்சனங்கள் அனைத்தும் பெண்களை சமமாக நடத்தாத, பிற்போக்கான இந்து மத சட்டத்தின் மேல் வைக்கப்படவேண்டியவை என்பதே உண்மை. இந்த நடைமுறை சிக்கல் தற்போது இருக்கும் தலைமுறையினருக்கு தெரியாதது ஒன்றும் நமக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. ஆனால் அப்போது, பேரறிஞர் என்று போற்றப்படும் அண்ணாவிற்கும் தெரியாமல் போனதா? என்கிற கேள்வி அனைவருக்கும் எழுகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…