இபிஎஸ்க்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் மனு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி.!

EPS CaseMadrasHC d

இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி.

கடந்த அதிமுக ஆட்சியின் போது நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீது, திமுக அமைப்பு அமைப்பு செயலாளர்  ஆர்.எஸ்.பாரதி 2018 ஆம் ஆண்டு, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் தெரிவித்திருந்தார். அந்த புகார் மனுவில் சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளில் முறைகேடு இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இது தொடர்பாக 4800 கோடி ரூபாய் அளவுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்ததிலும் எடப்பாடி பழனிசாமி மீது புகார் அளித்திருந்தார். இந்த புகாரில் நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தவும் கோரிக்கை வைத்திருந்தார். ஏற்கனவே 2018இல் லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த முதற்கட்ட விசாரணையில் பழனிசாமி மீது தவறில்லை என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணையை நடத்த வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைத்திருந்த நிலையில், புதிதாக விசாரணையை நடத்தவேண்டும் என ஆர்.எஸ்.பாரதி தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரித்த நிலையில் மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

அதாவது, 2018 இல் லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த முதற்கட்ட விசாரணையில் குறை காணமுடியாது எனவும், ஆட்சிமாற்றம் நடைபெற்றதால் புதிய விசாரணைக்கு உத்தரவிடமுடியாது எனவும் கூறி, ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army