கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவு..! பிரதமர் மோடி இரங்கல்..!

Modi condolence

மறைந்த கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கேரளா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இன்று அதிகாலை பெங்களூருவில் உயிரிழந்தார். 79 வயதான இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள தனது மகன் கண்காணிப்பில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4 மணிக்கு உம்மன் சாண்டி காலமானார். இவரது உடல் தற்போது பெங்களூருவில் இருந்து அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், ஸ்ரீ உம்மன் சாண்டி ஜி அவர்களின் மறைவுடன், பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, கேரளாவின் முன்னேற்றத்திற்காக உழைத்த பணிவான மற்றும் அர்ப்பணிப்புள்ள தலைவரை நாம் இழந்துவிட்டோம்.

மேலும், நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சராகப் பதவி வகித்தபோதும், பின்னர் நான் டெல்லிக்குச் சென்றபோதும் அவருடன் நான் நடத்திய பல்வேறு தொடர்புகளை நான் நினைவில் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் ஆதரவாளர்களுடனும் உள்ளன. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்