ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலை உயர்வு – தெற்கு ரயில்வே அறிவிப்பு

ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலை ரூ.10லிருந்து ரூ.50ஆக உயர்த்துவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் ரூ.10லிருந்து ரூ.50ஆக உயர்ந்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முக்கிய ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்ந்தை தொடர்ந்து மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.
கொரோனா பரவலால் ரயில் நிலையங்களில் பயணிகளுடன் வருபவர்களுக்கு அனுமதி வழங்காத நிலையில், நேற்று முதல் பயணிகளுடன் வருபவர்களையும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் ரயில் நிலையங்களில் கூட்டம் கூடுவதையும், பயணிகள் அல்லாதவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவும், சென்னையில் உள்ள ரயில் நிலையங்களின் பிளாட்பாரம் டிக்கெட்டு விலை தற்காலிகமாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025