பாட்டாளி மக்கள் கட்சி கீழ்வேளூர் தனி தொகுதிக்கு புதிய வேட்பாளரை அறிவித்துள்ளது.
வருகின்ற சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, அனைத்து கட்சியினர் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் அறிவிப்பு அனைத்தும் முடிந்து தற்போது வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசிநாள் என்பதால் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யாமல் உள்ள வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், அனைத்து கட்சியினர் சில தொகுதிகளில் வேட்பாளர் மாற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில்,பா.ம.க தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வரும் 06.04.2021 அன்று நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், நாகப்பட்டினம் மாவட்டம் 164, கீழ்வேளூர் (தனி) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரு.வேத.முகுந்தன் அவர்கள் மாற்றப்படுகிறார்.
அவருக்குப் பதிலாக கட்சியின் பொதுச் செயலாளர் திரு.வடிவேல் இராவணன் பா.ம.க. வேட்பாளராக போட்டியிடுவார் என்பதை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…