திருமாவளவன் பெண்களை மதிப்பவர்,பண்பாடு நிறைந்தவர் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் , பெண்கள் குறித்தும், மதம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில், அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே இது குறித்து திருமாவளவன் கூறுகையில்,மனுநீதி நூல்களில் உள்ளது ,பற்றி நான் பேசியதைத் திரித்து, பொய்யைப் பரப்புகிறது வக்கிரபுத்தி கொண்ட கும்பல் என்று விளக்கம் அளித்தார். இதற்கிடையில், நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். திருமாவளவனுக்கு ஆதரவாகவும் ஒரு சில அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருமாவளவன் கூறியது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,திருமாவளவன் பெண்களை மதிப்பவர்,பண்பாடு நிறைந்தவர்.திருமாவளவன் மனுநீதி நூல்களில் உள்ள, தவறான கருத்துகளைத்தான் சுட்டிக்காட்டி இருக்கின்றார். அதை வேறுவிதமாகத் திரித்து, அவர் மீது, சங் பரிவார் அமைப்புகளின் ஆதரவாளர்கள், குற்றச்சாட்டு கொடுத்து உள்ளனர்.உண்மையில், புகார் கொடுத்தவர்கள்தான் குற்றவாளிகள். திருமாவளவன் மீதான வழக்குகளை உடனே திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…