சென்னை : ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்திவருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர சாம்சங் நிறுவனம் ஒப்புக்கொண்டாலும், தொழிற்சங்கம் அமைக்க அனுமதி தர மறுத்து வருகிறது. அதனால், தொடர் போராட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த சாம்சங் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் போராட்டம் தொடர்ந்த காரணத்தால், சுங்குவார்சத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து அருகாமையில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக […]
சென்னை : மது மற்றும் போதைப்பொருட்களை நாடு தழுவிய அளவில் முழுதாக தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மது ஒழிப்பு மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று உளுந்தூர்பேட்டையில் நடத்தியது. இந்த மாநாட்டில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் தேசிய அளவில் மது ஒழிப்பு கொள்கையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்றும், மது விலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு […]
சென்னை : தமிழக அரசியலில் அதிகம் எதிர்நோக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு’ நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. விசிக மகளிரணி சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலிருந்தும் ஏரளமான பெண்கள் கலந்துகொண்டனர். விசிக தலைவர் திருமாவளவன் இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். இந்த மாநாடு பற்றி திருமாவளவன் செய்தியாளர்களிடம் அறிவிக்கும் போதிலிருந்தே மாநாடு குறித்த பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விதமாக பேசப்பட்டன. திருமாவளவன் […]
சென்னை : இன்று காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னையில் காந்தி சிலைக்கு அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் மரியாதை செலுத்தினார். அதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், விசிக மது ஒழிப்பு மாநாடு, உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு தனது கருத்துக்களை கூறினார் . அவர் பேசுகையில், ” மது ஒழிப்பு தமிழ்நாட்டுக்கு அவசியமான ஒன்று. விசிகவின் மாநாடு தற்போது தேவையான ஒன்றுதான். அதுவும் காந்தி பிறந்தநாளில் இந்த மாநாடு நடப்பது […]
சென்னை : தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு இன்று மாலை 3 மணிக்கு உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்த அறிவிப்பை அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்ததில் இருந்து மாநாடு குறித்த பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் அதிகரிக்க தொடங்கிவிட்டன. ‘மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவும் வரலாம்’ என்கிற திருமாவின் அழைப்பு திமுக கூட்டணிக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதனை அடுத்து வந்த பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி […]
சென்னை : கடந்த ஜனவரியில் விசிக கட்சியில் இணைந்து குறுகிய காலத்திற்குள் விசிகவின் துணை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பிற்கு வந்தவர் ஆதவ் அர்ஜுனா. இவர் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், திமுக பற்றி பல்வேறு கருத்துக்களை கூறியிருந்தார். “விசிக கூட்டணி இல்லாமல் வடமாநிலங்களில் திமுக ஜெயிக்க முடியாது.”,” சினிமாவிலிருந்து வந்தவர்களே துணை முதல்வர் (உதயநிதி ஸ்டாலின்) ஆகும்போது, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் துணை முதல்வர் ஆகக்கூடாதா.?” என்று அவர் பேசிய […]
சென்னை : விசிக நடத்தவுள்ள மது ஒழிப்பு மாநாடு தான் தற்போது தமிழக அரசியலில் ‘ஹாட் டாபிக்’-காக மாறியுள்ளது. வரும் அக்டோபர் 2ஆம் தேதி விசிக சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அனைத்து கட்சி தலைவர்களையும் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் வாய்மொழியாக அழைப்பு விடுத்தார். அப்போது, ‘விருப்பம் இருந்தால் அதிமுகவும் கலந்து கொள்ளலாம்.’ என கூறினார். திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவனின் பேச்சு அரசியல் […]
சென்னை : விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு இதற்கு முன் அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். மேலும், அக்டோபர்-2 ம் தேதி நடைபெற உள்ள இந்த மது ஒழிப்பு மாநாட்டிற்கு திமுகவும் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு தற்போது திருமாவளவன், திமுக இந்த மாநாட்டில் பங்கேற்கிறது என தெரிவித்துள்ளார். இன்று காலை சென்னை அறிவாலயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திருமாவளவன் சந்தித்து அழைப்பு விடுத்த பிறகு […]
சென்னை : விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது, தனது கட்சிக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், “ஆட்சியிலும் பங்கு , அதிகாரத்திலும் பங்கு” என பேசியது, மதுரையில் விசிக கொடி கம்பம் அகற்றப்பட்டு பின்னர் அனுமதி அளிக்கப்பட்ட விவகாரம் என விசிக – திமுக இடையே ஓர் விரிசல் போக்கு நிலவியதாக கூறப்பட்டது. இப்படியான சூழலில் தான், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். இந்த சந்திப்பானது […]
மதுரை : விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கப்பட்ட போது, அக்கட்சி தலைவர் திருமாவளவன் மதுரை, K.புதூர் பகுதியில் முதல் முதலாக அக்கட்சி கொடியை ஏற்றினார். அப்போது 20 அடி உயர கம்பத்தில் இந்த கட்சிக் கொடி பறக்கவிடப்பட்டது. இக்கட்சி கொடி கம்பமானது, அண்மையில் புதுப்பிக்கப்பட்டு அதன் உயரம் 20 அடியில் இருந்து 62 அடியாக உயர்த்தப்பட்டு மீண்டும் நிறுவப்பட்டது. 62 அடியாக உயர்த்திய கொடி மாநகராட்சியில் கம்பத்திற்கு உரிய அனுமதி வாங்கவில்லை எனக்கூறி, நேற்று நள்ளிரவு 1 […]
சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று நடைபெற்ற அவரது கட்சி கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று கூறிய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி என தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், “எதிர்த்து பேசக்கூடாது , போராடக்கூடாது, கல்வியில் உயர்ந்துவிட கூடாது, உயர்ந்த பதவிக்கு வர ஆசைப்படக்கூடாது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கக் கூடாது என்று இருந்த நிலையில், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி பற்றிய குரலை உயர்த்தினார்களோ […]
சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று சென்னையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், ” வரும் அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளன்று விடுதலை சிறுத்தைகள் மகளிர் அமைப்பு சார்பாக மதுஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது.”என அறிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையில் கள்ளசாராயத்தால் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,589ஆக உள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தினரை […]
சென்னை : வருகின்ற அக்டோபர் 2-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி சார்பில் மது போதைப் பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கட்சியின் தொடர்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த சூழலில், போராட்டத்தில், “அதிமுக” பங்கேற்கலாம் என விசிக தலைவர் திருமாவளவன் திடீர் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மாநாடு குறித்து பல விஷயங்களை பேசினார். செய்தியாளர்களை சந்தித்தபோது “விசிக நடத்தும் மது ஒழிப்பு […]
சென்னை : வாழை படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜ் வீட்டுக்கே நேரில் சென்று வாழ்த்தினார் தொல். திருமாவளவன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘வாழை’ படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெற்றது. முக்கிய பிரமுகர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் இப்படத்தை பார்த்துவிட்டு கண்ணீர் விடாத குறையாக புகழ்ந்து, தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளார்கள். அந்த வரிசையில், திருமாவளவன் வாழை படத்தை பார்த்துவிட்டு, இயக்குனர் மாரி செல்வராஜ் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுகம் மற்றும் விஜய் அரசியல் வருகை குறித்தும் செல்வப்பெருந்தகை, திருமாவளவன், சீமான் ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக உள்ள விஜய் தற்போது தீவிர கள அரசியலில் ஈடுபட தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தனது பயணத்தை துவங்கியுள்ளார். இன்று தனது கட்சிக் கொடியை சென்னை, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏற்றியுள்ளார். மேலும், கட்சி […]
சென்னை: திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி காடுகளில் சுமார் 8,000 ஏக்கர் நிலப்பரப்பு தனியார் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அங்கு தனியார் நிறுவனங்கள் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது. இந்தக் குத்தகை காலம் 2028ஆம் ஆண்டு முடிவடைகிறது. மாஞ்சோலை சுற்றியுள்ள பகுதியில் பல்வேறு இடங்களில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள தோட்டங்களில் பணியாற்றி வந்தனர். இப்படியான சூழலில், தனியார் நிறுவனங்கள் தங்கள் குத்தகை காலத்தை முன்னதாவே முடித்துக்கொண்டு, அங்கு வேலை பார்த்து […]
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல என விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னை, பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்ப்பட்டார். இந்த கொலை தொடர்பாக இதுவரை 8 பேர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இந்த கொலை வழக்கின் உண்மைத்தன்மை விசாரிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சென்னை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]
சென்னை: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கலையும், மாநில அரசின் மீதான கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னையை அடுத்து பெரம்பூரில் அவரது வீட்டருகே மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தேசிய கட்சியின் மாநில தலைவர் தலைநகர் சென்னையில் […]
டெல்லி: மக்களவைத்தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. நாளை மறுநாள் (ஜூன் 8) பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். NDA கூட்டணியில் நிதிஷ்குமார் (ஐக்கிய ஜனதா தளம்), சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்) ஆகியோர் மிக முக்கிய பங்கு வகிக்ன்றனர். இந்த இரு தலைவர்களும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து 10 ஆண்டுகால பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என பல அரசியல் தலைவர்கள் கூறி […]
அரியலூர்: 2024 மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழகத்தில் சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி ஆதரவுடன் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் அலுவலரிடம் தனது வெற்றி சான்றிதழை வாங்கிய பிறகு, திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார், சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பிஜு ஜனதா தளம் கட்சி […]