கட்சியில் இணைவது உறுதி? தவெக அலுவலகத்திற்கு ஆதவ் அர்ஜுனா வருகை!

ஆதவ் அர்ஜுனா, அதிமுக நிர்மல் குமார் விஜய் முன்னிலையில் இன்று மதியம் தவெக-வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Aadhav Arjuna

சென்னை :கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது ஆதவ் அர்ஜுனா பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவரே பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

பின்னர், அவர் எந்த கட்சியில் இணைய போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், சமீப நாட்களாக அவர் த.வெ.க கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. தவெகவில் ஆதவ் அர்ஜுனாவிற்கு தேர்தல் பிரிவு பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து, சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு ஆதவ் அர்ஜுனா வருகை தந்துள்ளது அவர் கட்சியில் இணைவதை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் இன்னும், அவர் கட்சியில் இணைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை.

மேலும், பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்மல் குமார், தற்போது தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. அதிமுக ஐடி விங் இணைச் செயலாளராக உள்ள நிர்மல் குமார் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அதிமுக தொடர்பான பதிவுகளை நீக்கினார். அது மட்டுமின்றிநிர்மல்குமார் ஆதவ் அர்ஜுனாவிற்கு முன்னதாகவே தவெக அலுவலகத்திற்கு  வருகை தந்திருந்தார். இருவரும் இன்று விஜய் முன்னிலையில் கட்சியில் இனைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.