விஷ சாராய பலி – விழுப்புரம் மருத்துவமனைக்கு சென்று நேரில் ஆறுதல் தெரிவித்த முதல்வர்..!

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ள சாராயம் அருந்திய 34 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி தற்போது வரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கள்ளச்சாராயம் வியாபாரிகள் ஆறுமுகம், முத்து, ரவி ஆகிய மூவரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ள நிலையில், மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ள சாராயம் அருந்திய 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் உள்ளவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார். ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
மேலும், சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது அமைச்சர் பொன்முடி,மஸ்தான் ஆகியோர் உடனிருந்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025