திண்டுக்கல்லில் இளைஞரை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது என ஐஜி அன்பு தகவல்.
திண்டுக்கல் மாலபட்டி அருகே ராகேஷ் (வயது 26) என்பவர் மீன் பிடிப்பதற்காக குத்தகைக்கு எடுத்த செட்டி குளத்தை காவல் காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் அவரை சுட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர் ராகேஷின் உடலில் ஆறு இடங்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளது. இதன்பின் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து, குளத்தை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தது. தப்பிய நபர்களை திண்டுக்கல் காவல் துறை தீவிரமாக தேடி வந்தது. இந்த நிலையில், திண்டுக்கல்லில் ராகேஷ் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐஜி அன்பு தெரிவித்துள்ளார்.
சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதான பிரகாஷ், கணேச மூர்த்தி, ஜான் சூர்யா, மரியா பிரபுவிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செட்டிகுளம் குளத்தை குத்தைகைக்கு எடுத்து மீன் பிடிப்பது தொடர்பான முன்பகையால் ராகேஷ் கொலை செய்யப்பட்டதாக ஐஜி அன்பு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…