மகளை நரபலி கொடுத்த தந்தை – பெண் மந்திரவாதியிடம் காவல்துறை விசாரணை.!

Published by
பாலா கலியமூர்த்தி

மந்திரவாதி பேச்சை கேட்டு தனது மகளை நரபலி கொடுத்த தந்தையை கைது செய்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் பன்னீர்செல்வம் என்பவரின் மகள் 13 வயது சிறுமி கடந்த 18 ஆம் தேதி அங்குள்ள குளத்தங்கரையில் கழுத்து அறுக்கப்பட்டு விழுந்து கிடந்தார். அங்கு தண்ணீர் எடுக்க சென்றபோது தலையில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சிறுமி 19 ஆம் தேதி இரவு சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். பின்னர் சிறுமியின் தந்தை தனது மகளை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளனர் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து. தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லை செய்யப்பட்டதாக தந்தையே வந்து நாடகமாடிய நடிப்பில் இருந்தபோது போலீசார் முதலில் விசாரணையை தொடங்கினார்கள். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமியின் பாலியல் வன்புணர்வு செய்யப்படவில்லை என்று தெரியவந்தது. அதன்பின்பு தான் விசாரணையின் கோணத்தை புதுக்கோட்டை போலீசார் மாற்றினார்கள். இதன்பிறகு தொடர்ந்து 6 தனிப்படை அமைப்பு விசாரணை மேற்கொண்டார்கள்.

கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் தந்தையின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தந்தையை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், சிறுமியின் தந்தை பன்னீர்செல்வமும், உறவினர் குமார் என்பவரும் சேர்ந்து மூடநம்பிக்கையின் அடிப்படையில் மந்திரவாதி பேச்சை கேட்டு மகளை நரபலி கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்கள். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து கூடுதல் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மந்திரவாதி பேச்சை கேட்டு கொல்லை செய்தது தொடர்பாக பெண் மந்திரவாதி ஒருவரிடம் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

2 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

3 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

3 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

6 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

6 hours ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

7 hours ago