Pragg meet CM [Image source : X/@Minnambalamnews]
உலக கோப்பை செஸ் தொடரில் இரண்டாம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு, சென்னை விமான நிலையத்தில், மலர்கள் தூவியும், மலர் கிரீடம் அணிவித்தும் தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரக்ஞானந்தாவை விளையாட்டுத்துறை செயலர் அதுல்யா மிஸ்ரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வீரர்கள் பூங்கொத்துக்கொடுத்து வரவேற்றனர்.
இதன்பின் திறந்த வெளி வாகனம் மூலம் மேள தாளம் முழங்க, பிரக்ஞானந்தாவை ஊர்வலமாக கூட்டிச் சென்று, நேரு விளையாட்டு அரங்கில் பிரக்ஞானந்தாவுக்கு தேநீர் விருந்து வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 12 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, அவரது இல்லத்தில் சந்திக்க இருந்தார்.
இந்நிலையில், பிரக்ஞானந்தா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரக்ஞானந்தாவின் பெற்றோர்கள் மற்றும் அவரது முதல் பயிற்சியாளர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். முதல்வரை சந்தித்த பிரக்ஞானந்தா, உலக செஸ் தொடரில் தான் வென்ற பதக்கத்தை, அவரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியைப் பற்றி பிரக்ஞானந்தாவிடம் பேசி வருகிறார். மேலும், இந்த சந்திப்பின் போது உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் இரண்டாவது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு சார்பில் 30 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…