nlc [Imagesource : APB]
என்எல்சி நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் ஊதிய வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டங்களில் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் என்எல்சி
ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தொழிலாளர்களின் கோரிக்கைகளை தற்போதைக்கு ஏற்க இயலாது என என்எல்சி தெரிவித்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து, தற்போது போராட்டக்காரர்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கடலூர் மாவட்ட காவல்துறைக்கு என்எல்சி நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது. போராட்டத்தால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…