500 Tasmac shops to close [File Image]
டாஸ்மாக் கடைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
சென்னை தலைமை செயலகத்தில் மாநில வாணிப கழகத்தின் அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்கள், ஆட்சியர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வுகூட்டம் மேற்கொண்டார். அப்போது, டாஸ்மாக் கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அமைச்சார் வெளியிட்டார்.
அதில், டாஸ்மாக் மற்றும் மது கூடங்கள் நண்பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு மூட வேண்டும். டாஸ்மாக், மதுக்கூடங்கள் தீர்ப்பில் எவ்வித விதிமீறல்கள் இருக்க கூடாது என தெளிவாக கூறியுள்ளார். டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியல் வைக்கப்படுவதை மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றுள்ளார்.
மதுபான வகைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யக்கூடாது என்றும் கூடுதல் விலைக்கு மது வகைகள் விற்றால் அதற்குரிய அபராதத்தை வசூலிக்க வேண்டும். மதுபான கடைகளை தவிர மற்ற இடங்களில் மதுபானங்கள் விற்கப்படும் இடங்களை கண்டறிய வேண்டும் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சட்டவிரோத மதுக்கூடங்கள் செயல்படவில்லை என்பதை முதுநிலை மண்டல மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும். சட்டவிரோத மதுக்கூடங்கள் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் எஸ்பி மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் விற்கப்படுவதை கண்டறிந்து காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் பதிவேடுகளையும் தினசரி அடிப்படையில் பராமரிக்க வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…