7 பேரை விடுவிக்க வேண்டும் என தமிழக அமைச்சரவை 2 ஆண்டுகளுக்கு முன் தீர்மானம் நிறைபெற்றப்பட்டது. இந்நிலையில், தன்னை விடுவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தரப்பில் வழக்கு தொரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 22-ம் தேதி உச்சநீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவு எடுக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தி வைக்கப்பட்டது.
உச்சநீதிமன்றம் அளித்த ஒரு வார கால அவகாசத்தில் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், நேற்று ஆளுநர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜூவ் காந்தி கொலை வழக்கில் 7 விடுதலை செய்வது தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தேன். விடுதலை குறித்து முடிவு செய்ய ஜனாதிபதிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என கூறப்பட்டு உள்ளது.
அரசின் பரிந்துரையை ஆளுநர் பன்வரிலால் புரோகித் நிராகரித்த்துளளதால் இதற்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையில், முடிவு எடுக்க குடியரசுத்தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.
பல ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும், காலதாமதம் செய்யாமல் நல்ல தீர்ப்பு வழங்கி, விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை வரும் 9-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…