பதவி கிடைக்காத விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார் -ஜெயக்குமார் பதிலடி.!

- தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமாக மாறிவிட்டது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை ..?எடுத்துள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
- பாஜக மாநிலத் தலைவர் பதவி கிடைக்காத விரக்தியில் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்து உள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் பாஜக சார்பில் ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் , குடியுரிமை சட்டத் திருத்தத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய நினைக்கிறார்கள்.
தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமாக மாறிவிட்டது என்பது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். தற்போது பல தமிழகத்தில் இடங்களில் இஸ்லாமிய தீவிரவாதி கைது செய்யப்பட்டது. இதை உறுதிப்படுத்தி உள்ளது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை ..?எடுத்துள்ளது என கூறினார்.
இந்நிலையில் இன்று அமைச்சர் ஜெயக்குமாரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் , சமீபத்தில் தமிழகத்தில் நல்லாட்சி நடப்பதாக மத்திய அரசே பாராட்டியது. பாஜக மாநிலத் தலைவர் பதவி கிடைக்காத விரக்தியில் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்து உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025