தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றார்
தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலாளராக இருந்து வந்தவர் பீலா ராஜேஷ். இவர் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை அவ்வப்போது அளித்து வந்தார். அதேபோலவே, சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்த நிலையில், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், அவருக்கு பதில் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், மீண்டும் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை பொறுப்பேற்பார் எனக்கூறிய நிலையில், தற்பொழுது அவர் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக பொறுப்பேற்றார். இவர், 2012 – 2019 ஆம் ஆண்டுகளில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…