சென்னையில் இதுவரை வீடுகளுக்குள் புகுந்த 85 பாம்புகள் பிடிபட்டதாக வனத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. குறிப்பாக, சென்னையில் அதிகமான மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதோடு மட்டுமல்லாமல், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது.
சில இடங்களில் தேங்கி உள்ள மழை நீர் மற்றும் சகதியான இடங்களுக்குள் பாம்புகள் காணப்படுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி, பாம்பு பிடிப்பவர்களின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டது.
அந்த வகையில், சென்னையில் இதுவரை வீடுகளுக்குள் புகுந்த 85 பாம்புகள் பிடிபட்டதாக வனத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,பிடிபட்ட பாம்புகள் பாதுகாப்பாக வனத்திற்குள் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…